எங்கள அடிச்சுக்க தேசிய அளவுல கட்சியே கிடையாது..! மார்தட்டும் திமுக, அதிமுக..!

Asianet News Tamil  
Published : Oct 27, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
எங்கள அடிச்சுக்க தேசிய அளவுல கட்சியே கிடையாது..! மார்தட்டும் திமுக, அதிமுக..!

சுருக்கம்

dmk and admk leading in the high income party

அதிக வருமானம் ஈட்டும் மாநிலக் கட்சிகள் பட்டியலில் தி.மு.க. முதலிடத்தையும், அ.தி.மு.க. இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2015-16-ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த ஆய்வறிக்கையை, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி 2015-16 நிதியாண்டில் ரூ.77.63 கோடி வருமானம் பெற்று நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டிய மாநிலக் கட்சியாக தி.மு.க. முதலிடத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரூ.54.93 கோடி வருமானத்துடன் இந்த பட்டியலில் அ.தி.மு.க. இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வருமானம் ரூ.15.97 கோடி என்றும் பா.ம.கவின் வருமானம் ரூ.6.076 கோடி என்றும், தேமுதிகவின் வருமானம் ரூ.3.129 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2015-16-ம் ஆண்டுக்கான நிதிநிலையை அளிக்க வேண்டிய காலக்கெடுவான 2016-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதிக்கும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 47 மாநிலக் கட்சிகளில் மூன்றில் ஒருபங்கு கட்சியினரே நிதிநிலை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். 

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி (உத்தரப் பிரதேசம்), லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(பீகார்), உமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தங்கள் நிதிநிலை அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் இதுவரை அளிக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?