நீங்க 70 தானே.. நாங்க 118.. திருமணத்தில் போட்டி போடும் திமுக-அதிமுக

First Published Mar 26, 2018, 10:19 AM IST
Highlights
dmk and admk conducted free marriage


திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு திருமணங்களை நடத்திவைக்கின்றன.

கொங்குமண்டலத்தில் அதிமுகவே கோலோச்சிவருகிறது. கொங்கு மண்டலம் முழுவதுமே அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கூட திமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணம் கொங்கு மண்டலம் தான். எனவே கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கில், ஈரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக திமுக மண்டல மாநாடு நடைபெற்றது.

நேற்றுடன் மண்டல மாநாடு முடிவடைந்த நிலையில், மாநாட்டு பந்தலில் இன்று திமுக சார்பில், 118 ஜோடிகளுக்கு திமுக சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்திவைக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸடாலின் தாலி எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்திவைத்தார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் திமுக திருமணம் நடத்தி வைத்துவரும் நிலையில், மறுபுறம் அதிமுக சார்பில் கோவையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான இந்த விழாவில், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு தாலி எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்திவைத்தனர்.

மணமக்களுக்கு 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. கொங்கு மண்டலத்தை தக்கவைக்கும் முயற்சியில் அதிமுகவும், கொங்கு மண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் திமுகவும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
 

click me!