பேராசிரியர், பொதுச்செயலாளர் மட்டுமல்ல... அதுக்கும் மேல க.அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் என்ன உறவு தெரியுமா..?

By vinoth kumarFirst Published Dec 19, 2019, 1:18 PM IST
Highlights

பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா! நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்!“ என்று வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்கு இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று 98-வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திமுக மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான அன்பழகனுக்கு இன்று 98-வது பிறந்தநாள். அவர் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரது 98-வது பிறந்த நாளில் கட்சியினா் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகன் வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் சென்று இருந்தனர். 

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் பேராசிரியர் க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா! நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்!“ என்று வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

click me!