காங்கிரஸுக்கு 20, மதிமுகவுக்கு 8-10, இடதுசாரிகள் தலா 8... திமுக தயார் செய்த தொகுதி பங்கீடு..!

By Asianet TamilFirst Published Feb 13, 2021, 9:11 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்கள் குறித்து தெரிய வந்துள்ளன. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைத் தொடங்கப்படவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது. அண்மையில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சிகளின் சார்பில் குழுக்கள் அமைத்து திமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லையே தவிர, திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் ஒதுக்கப்பட உத்தேசித்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை கூறியிருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
திமுக தரப்பில் விசாரித்தபோது, காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு காங்கிரஸ் முரண்டுப் பிடித்தால், 25 தொகுதிகள் வரை தரப்படலாம் என்று திமுகவில் கூறுகிறார்கள். சிபிஎம், சிபிஐ என இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கு தலா 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. மதிமுகவுக்கு 8-10 தொகுதிகள் வரை பேசப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும், கொமதேகவுக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிகும் தலா 2 தொகுதிகள் வீதம் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளாதாக திமுக தரப்பு தெரிவிக்கிறது. இந்தத் தேர்தலில் அதிக  தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திமுக விரும்புகிறது. திமுகவுக்காகப் பணியாற்றும் ஐ-பேக் நிறுவனமும் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் அல்லது கூட்டணி கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலினிடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
அதை கருத்தில் கண்டே திமுக இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்காமல் போட்டியிட முடிவு செய்துள்ளது. திமுக ஒதுக்க உத்தேசித்துள்ள இந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்று திமுக உறுதியாக நம்புகிறது. குறிப்பாக முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று திமுக நம்புகிறது. 

click me!