திமுக, அதிமுகவில் அணி வகுக்கும் விஐபி வாரிசுகள்... தொகுதிக்கு துண்டு போட்டு பணிகள் தொடக்கம்..!

By Asianet TamilFirst Published Jan 4, 2019, 10:56 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் கூட்டணிகளே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதற்குள் பல தொகுதிகளில் தமிழக அரசியல் கட்சிகளின் விஐபி வாரிசுகள் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஓசையில்லாமல் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் கூட்டணிகளே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதற்குள் பல தொகுதிகளில் தமிழக அரசியல் கட்சிகளின் விஐபி வாரிசுகள் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஓசையில்லாமல் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக கூட்டணியைத் தவிர தமிழகத்தில் இன்னும் வேறு கூட்டணியே உருவாகவில்லை. திமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் என்பது பற்றி இதுவரை பூர்வாங்கமாகப் பேச்சுவார்த்தைக்கூட நடக்கவில்லை. ஆனால், திமுகவில் உள்ள விஐபிகளின் வாரிசுகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையில் தாங்கள் விரும்பும் தொகுதிகளில் நாடாளுமன்ற பணிகளை ஓசையில்லாமல் செய்து வருகிறார்கள். 

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தன் இதில் முக்கியமானவர். இவர் வேலூர் தொகுதியிலும், விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் டாக்டர் கெளதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலும் திருவண்ணாமலை திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.வ. வேலுவின் மகன் கம்பன் திருவண்ணாமலை தொகுதியையும் குறி வைத்து நாடளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். 

அதிமுகவிலும் எம்.பி. கனவில் சில விஐபிகளின் வாரிசுகள் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் முக்கியமனாவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் வினோத்தும் ஒருவர். இவர் சேலம் தொகுதியைக் குறிவைத்து பணிகளை ஓசையில்லாமல் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனித்து போட்டுயிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்ற ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்.  தென் சென்னையின் தற்போதைய சிட்டிங் எம்பியும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் மீண்டும் தென் சென்னை அல்லது வட சென்னை தொகுதிக்கு மாறும் ஆசையில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

click me!