கடந்த 2004ம் ஆண்டுக்குப் பிறகு திமுகவிற்கு கொங்கு மண்டலம் எப்போதுமே பிரச்சனையாக இருந்து வருகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை பெற முடியாமல் போனதற்கு கொங்கு மண்டலமே காரணமாக இருந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட திமுக கூட்டணிக்கு கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த 2004ம் ஆண்டுக்குப் பிறகு திமுகவிற்கு கொங்கு மண்டலம் எப்போதுமே பிரச்சனையாக இருந்து வருகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை பெற முடியாமல் போனதற்கு கொங்கு மண்டலமே காரணமாக இருந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட திமுக கூட்டணிக்கு கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
இதேபோல் 2011 தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு பலத்த அடியை கிடைத்தது. கொங்கு மண்டலம் கடந்த 20 ஆண்டுகளாக திமுகவிற்கு எதிர்மறையாகவே இருப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதனை மனதில் வைத்து ஸ்டாலின் மிக நேர்த்தியாக கொங்கு மண்டலத்தில் குறைந்த தொகுதிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.
பொதுவாக கொங்கு மண்டலம் என்றால் நினைவுக்கு வருவது கோவை தான் ஆனால் கோவையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக ஒதுக்கியுள்ளது. இதேபோல் திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு திமுக ஒதுக்கிவிட்டது. கரூர் தொகுதியில் காங்கிரஸ் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் எஞ்சியுள்ள நீலகிரி பொள்ளாட்சி சேலம் ஆகிய தொகுதிகளில் மட்டுமே திமுக வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. கொங்கு மண்டலத்தில் மற்றொரு முக்கிய தொகுதியான ஈரோட்டையும் கூட மதிமுகவிற்கு கைமாறிவிட்டது திமுக. நீலகிரி தனித் தொகுதி என்பதால் எஞ்சிய மூன்று தொகுதிகளில் மட்டுமே கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை திமுகவால் நிறுத்த முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் வட மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தனக்காக ஒதுக்கிக் கொண்டது.
இதற்கு காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக சார்பில் கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வே முடிவின்படி கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு பெரிய அளவில் எந்த சாதகமான அம்சங்களும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் குறிப்பிட்ட ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது கொங்கு மண்டலத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சிலரும் கூட அந்தக் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறுவதை விரும்பவில்லை. இப்படி வட மாவட்டத்தில் பலமான அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அந்த கட்சியின் மூலம் கொங்கு மண்டலத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதால்தான் அப்பகுதிகளில் தொகுதிகளில் திமுக குறைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொகுதிகளில் போட்டியிட திமுக பிரபலங்களை கூட பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். இதனால்தான் கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சியினர் கேட்ட தொகுதிகளை எல்லாம் கொடை வள்ளல் போல் திமுக வாரி வழங்கியுள்ளது.