MK Stalin : கருணாநிதியை விட டேஞ்சரான ஆள் இந்த ஸ்டாலின் தான்… ஸ்டாலினை புகழ்ந்த ஆ.ராசா

Published : Dec 19, 2021, 11:57 AM IST
MK Stalin : கருணாநிதியை விட டேஞ்சரான ஆள்  இந்த ஸ்டாலின் தான்… ஸ்டாலினை புகழ்ந்த ஆ.ராசா

சுருக்கம்

‘கருணாநிதியை விட டேஞ்சரான ஆள்  இந்த ஸ்டாலின் தான்’ என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் எம்.பி ஆ.ராசா.

சென்னையில் திமுகவின் தலைமையிடமான அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்த திமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத்தில் ஸ்டாலின் ஆற்றிய உரைகள், ‘’தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்’’ என்று  மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘பல வருடங்களாக நான் தளபதியின் பக்கத்தில் இருக்கிறேன். ஆனால் கடந்த ஆறு மாத காலமாகத்தான் முதல்வர் என்ற முறையில் அவரது அருகில் நான் அமைச்சராக இருந்து பார்த்து வருகிறேன். தமிழக மக்களை அப்படிப் பார்த்துக் கொள்கிறார். இதோ இந்த கூட்டத்தின் மூலம் கட்சியையும் அப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது முனைப்பு தெரிகிறது’ என்று பேசினார்.

அடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்பியுமான ஆ ராசா,  நூல் அறிமுக விளக்க உரையாற்றினார். அப்போது, ‘கருணாநிதியை விட டேஞ்சரான ஆள்  இந்த ஸ்டாலின் என வட இந்தியாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  இதைவிட ஒரு நல்ல பெயரை நீங்கள் வாங்கவே முடியாது’’ என்று முதல்வர் ஸ்டாலினை பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார். ராசா இதை கூறிய உடன், அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!