இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிட்டா தேமுதிக வெற்றி நிச்சயமாம் !! உளவுத் துறை சொன்ன ஹேப்பி நியூஸ் !!

By Selvanayagam PFirst Published Mar 16, 2019, 7:41 AM IST
Highlights

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய மிகவும் தாமதம் ஆனதில் தேமுதிகவுக்கு  சற்று பினனடைவு ஏற்பட்டாலும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என உளவுத் துறை அளித்த  ரிப்போர்ட்டால் தேமுதிக நிர்வாகிகள் செம குஷியில் உள்ளனர்.
 

அதிமுகவுடனான கூட்டணியை முடிவு செய்வதற்கு, தேமுதிக பயங்கர காலம் தாழ்த்தியது. முந்தைய தேர்தல்களில், இதுபோன்று காலம் தாழ்த்தியதால், அக்கட்சியின், ஓட்டு வங்கி கணிசமாக சரிந்தது.  தற்போது, அதிமுக கூட்டணியில், நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள  கட்டாய வெற்றி தேவைப்படுகிறது.

தற்போது அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் என முடிவாகிவிட்ட நிலையில் எந்தெந்த தொகுதி என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகள் தேமுதிகவுக்காக ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


அப்படி இந்த நான்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டால் அதில் யார் ? யாரை நிறுத்துவது போன்ற வியூகங்களை தேமுதிக வகுத்து வருகிறது. 

கள்ளக்குறிச்சியில், சுதீஷ் போட்டியிட்டால், வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஏனெனில் . இங்குள்ள, மூன்று சட்டசபை தொகுதிகள், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான, சேலத்தில் உள்ளது.

சேலத்தில், பல்வேறு திட்டங்களை, முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளதால், சுதீஷுக்கு சாதகமாக, இது அமையும் என, உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதேபோல, கிருஷ்ணகிரி தொகுதியில், தேமுதிக மாவட்ட செயலர் அன்பரசன் களமிறக்கப்பட உள்ளார். 

இவர் ஏற்கனவே, 2009ல், தனித்து போட்டியிட்டு, அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார். அதிமுகவைச்  சேர்ந்த, தம்பிதுரையின் உறவினர். இவர் என்பதால்  அதிமுகவினர் இவருக்காக செமயாக களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியில், தேமுதிக மாநில மாணவர் அணியை சேர்ந்த, விஜயகுமார் போட்டியிடவுள்ளார். இவரும், முந்தைய தேர்தலில், அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார்; தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது. 

இதனிடையே வடசென்னை அல்லது திருவள்ளூர் தனி தொகுதியை, அ.தி.மு.க., தர உள்ளது. இதில், திருவள்ளூர் தனித்தொகுதியில் போட்டியிடுவதையே, தே.மு.தி.க., விரும்புகிறது.

இத்தொகுதியில், தேமுதிக  மாநில இளைஞரணி செயலரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான, நல்லதம்பியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர், சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருவது, மக்கள் மத்தியில் பேசப்படும் விஷயமாக அமையும் என, தே.மு.தி.க., தலைமை கருதுகிறது.

இப்படி இந்த நான்கு தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டடால் அதில் வெற்றி பெறுவது உறுதி என உளவுத் துறை அளித்துள்ள ரிப்போர்ட்டால் குஷியாகியுள்ள தேமுதிக அந்த தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் வலியுறுத்தி வருகிறது.

click me!