காங்கிரஸிடமிருந்து 2-டை பறித்து 7 ஆக தேமுதிகவுக்கு கொடுக்கும் திமுக!! அஷ்டமி, நவமி கழித்து அறிவிக்கும் விஜயகாந்த்...

By sathish kFirst Published Feb 25, 2019, 9:19 PM IST
Highlights

திமுகவோ காங்கிரஸுக்கு ஏற்கனவே கொடுத்த 10 தொகுதியில 2 சீட்டைக் குறைச்சு 8 ஆக கொடுக்கலாம்னு யோசனையில் உள்ளதாம். காங்கிரஸிடமிருந்து பறித்த அந்த இரண்டையும் சேர்த்து ஏழாக கொடுக்க இருக்கிறதாம் திமுக.

திமுகவோ காங்கிரஸுக்கு ஏற்கனவே கொடுத்த 10 தொகுதியில 2 சீட்டைக் குறைச்சு 8 ஆக கொடுக்கலாம்னு யோசனையில் உள்ளதாம். காங்கிரஸிடமிருந்து பறித்த அந்த இரண்டையும் சேர்த்து ஏழாக கொடுக்க இருக்கிறதாம் திமுக.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அது விஜயகாந்துக்கு மரியாதை குறைவு என்று பிரேமலதா நினைக்கிறாராம். ஆக அதிமுக பக்கம் தேமுதிக இனிமேல் போக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து திமுகவை ஆட்சியை பிடிக்கமுடியாத சூழலை உருவாக்கிய தேமுதிக மீது கொஞ்சமும் யோசிக்காத ஸ்டாலின் நேரில் வந்து சந்தித்தையே, காரணமாகக் சொல்லி, திமுகவுடன் கூட்டணி வைப்பதைத்தான் தேமுதிக தொண்டர்கள் விரும்புகிறார்களாம்.  

மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வாக்கு வங்கி 10 சதவீதத்தில் இருந்து இப்போது குறைந்துவிட்டது என கணக்கு போடுகிறது அதிமுக. அதனால் ஜெ., இருந்த சமயத்தில் விஜயகாந்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இப்போது கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறார்கள் அமைச்சர்கள். அதுமட்டுமல்ல ‘4 சீட் வரை நாம பேசி பார்த்தாச்சு. வந்தால் வரட்டும். இல்லைன்னா எங்கே வேணும்னாலும் போகட்டும்...’ என அதிமுக அமைச்சர்கள்  வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். அதுமட்டுமல்ல ‘தேமுதிக கூட்டணிக்கு வரவில்லையென்றாலும் பரவாயில்லைனு அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதும்,  எடப்பாடி பழனிசாமியோ பேசிக்கிட்டிருக்கோம்னு சொன்னதும் தேமுதிக தரப்பை உச்சகட்ட கடுப்பில் தள்ளியிருக்கிறதாம்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் கூட்டணி பேச்சுவார்த்தை வேகமெடுத்து, பாமக தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக அமைச்சர்களால், உடம்பு சரியில்லாமல் வீட்டில் இருக்கும் விஜயகாந்த்தை இதுவரை வந்து சந்திக்காமல் இருப்பதால் பிரேமலதா மற்றும் தொண்டர்கள் சொல்லமுடியாத கோபத்தில் கொந்தளிக்கிறார்களாம். அனால், கடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதியே, விரும்பினாலும் கூட தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை என சொல்லப்பட்டது, ஆனால் அப்படிப்பட்ட ஸ்டாலின் தற்போது விஜயகாந்த்தை வீட்டுக்கு  வந்து பார்த்து விட்டு சென்றதால் விஜயகாந்தும் பிரேமலதா மனம் மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான சீட் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக எல்லாமே அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம், தேமுதிகவுக்கான சீட்டை உறுதிப்படுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கான சீட்டை முடிவு செய்யலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்களாம்.

தமிழகம் முழுவதுமுள்ள தேமுதிக மாசெகள்  தலைமைக்கு கழகத்திற்கு வந்துள்ளனர். தலைமைக் கழகத்தில் சுதீஷை சந்தித்து மாவட்டச் செயலாளர்கள் பேசியிருக்கிறார்கள். ‘பிஜேபி மீதும் , அதிமுக மீதும் மக்கள்கிட்ட  எதிர்ப்பு இருக்கு. அவங்களோட கூட்டணி வைக்கிறது சரிவராது. திமுக கூட்டணிக்கு போறது தான் நமக்கு சேப்டி. போன சட்டமன்றத் தேர்தலில் எல்லோரும் திமுக கூட்டணிதான் சரியென்று சொன்னோம் அப்போது கேட்காததால கேப்டனே டெபாசிட் கூட வாங்கல என புலம்பினார்களாம். 

முதலில் 3 சீட்டில் இருந்த திமுக, இப்போது 5 சீட்டுக்கு இறங்கி வந்திருக்காம். ஆனால் தேமுதிக இன்னும் 2 கேட்டுக்கிட்டு இருக்கிறதாம். திமுகவோ காங்கிரஸுக்கு ஏற்கனவே கொடுத்த 10 தொகுதியில 2 சீட்டைக் குறைச்சு 8 ஆக கொடுக்கலாம்னு யோசனையில் உள்ளதாம். நாளையும் நாளை மறுநாளும் அஷ்டமி நவமிங்குறதால  வியாழக்கிழமை அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

click me!