தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலையில்லை... பிரேமலதாவுக்கு ஜெயகுமார் பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2019, 12:01 PM IST
Highlights

தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வருமா? தனித்து களமிறங்குமா? அல்லது மற்ற கட்சியுடன் கூட்டணி வைக்குமா என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிரடி கருத்தை கூறியுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நேற்றைய தினம் எங்களது பலம் எங்களுக்குத் தெரியும். தகுந்த இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி, விஜயகாந்த், ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டது என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா தெரிவித்து உள்ளார்.

பிரேமலதா தெரிவித்து இருப்பது அவா்கள் கட்சித் தொடா்பான விவகாரம். அதிமுகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன. அதன் அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் கூட்டணியில் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வரவில்லை என்றால் கவலை இல்லை. தற்போது வரை தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறும் என்று முடிவு செய்யப்படாத நிலையில், அமைச்சா் ஜெயகுமார் இவ்வாறு தெரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!