எங்களோடது சாதி ஓட்டு கிடையாது... முழுக்க முழுக்க சிதறாம வரும்!! பாமகவை சீண்டும் தேமுதிக!!

By sathish kFirst Published Feb 21, 2019, 1:12 PM IST
Highlights

’எங்கள் ஓட்டு பொதுவான ஓட்டு. சாதி ஓட்டு கிடையாது. அதனால் முழுக்க முழுக்க அதிமுகவுக்கும் டிரான்ஸ்பர் ஆகும்,. எனவே தேமுதிகவின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்’ என தேமுதிக டிமாண்ட் வைப்பதால் அதிமுக கூட்டணியில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

பாமகவுக்கு 7+1 போலவே  8+1 என்ற சீட்டுகள் வேண்டும் என தேமுதிக உறுதியாக இருக்கிறது. அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்று கேட்க, 7 +1 என்று சொன்னதும் அதற்கு நாம் குறையக் கூடாது என்று விஜயகாந்தே சொல்லியிருக்கிறார்.

ஆனால், அதிமுக இதற்கு ஒப்புக் கொள்வதாக இல்லை. முதலில் தேமுதிகவிடம் பேச்சு நடத்திய பிஜேபி, இந்த டீலை பேசி முடிக்க அதிமுகவிடமே விட்டுவிட்டதாம். இதனால் அதிமுக சார்பில் சிலர் தேமுதிக முக்கிய பிரமுகர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

வட மாவட்டங்களில் தேமுதிக வலுவாக இருக்கும் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி என முக்கிய தொகுதிகளைக் குறிவைத்துள்ளது தேமுதிக. ஆனால், கூட்டணியில் முந்திக்கொண்டு பாமகவும் கேட்டிருக்கிறது. அதேபோல, ’எங்கள் ஓட்டு பொதுவான ஓட்டு. சாதி ஓட்டு கிடையாது. அதனால் முழுக்க முழுக்க அதிமுகவுக்கும் அப்படியே சிதறாம வரும். எனவே தேமுதிகவின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்’ என அதிமுகவிடம் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளைத் தவிர தமிழகம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கிகளோடு வலுவாக இருக்கும் தேமுதிகவுக்கு  பாமகவை விட ஒரு சீட்'டாவது அதிகமா வேணும் என உறுதியாக இருக்கிறார்களாம்.

ஒருகட்டத்தில் அதிமுக முக்கியப்புள்ளியோ, ‘தேமுதிகவோட பலமே  விஜயகாந்த் தான் . அவர் வெளியே வந்தால்தான் வாக்கு எகிறும். அவர் இப்போது இருக்கும் நிலையில் பிரசாரத்துக்கு வரவே மாட்டார். எனவே தேமுதிகவை கூட வைத்திருந்தால்  நமக்குக் பலன் கிடைக்காது. அவங்க போனால் போகட்டும்’  கெஞ்ச வேண்டாம் என சொல்லி விட்டார்களாம்.

இந்த கேப்பில், திமுக தலைமையிடம் ஓஎம்ஜி கொடுத்த ரிப்போர்ட்டில், பாமக அதிமுக பக்கம் போன நிலையில் அதை சரிக்கட்டவும்,  வட மாவட்டத்தை வலுப்படுத்த, தேமுதிகவை திமுக பக்கம் இழுக்கலாம் என்று . இந்நிலையில் இப்போது திமுக அணியில் இருக்கும் விசிக, மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே சீட் நெருக்கடியான இருப்பதால் தேமுதிக திடீரென திமுக பக்கம் வந்தால் என்ன செய்வது என யோசிக்கிறதாம் அறிவாலயம்.

click me!