தேமுதிகவினர் 200 பேர் மீது வழக்கு... அதிமுக மீது கடும் கோபத்தில் பிரேமலதா..!

Published : Feb 13, 2021, 10:54 AM IST
தேமுதிகவினர் 200 பேர் மீது வழக்கு... அதிமுக மீது கடும் கோபத்தில் பிரேமலதா..!

சுருக்கம்

கூட்டணிக்கு அழைக்காததால் அதிமுக மீது கடும் வசவுகளை வீசி வருகிறார் பிரேமலதா. இந்நிலையில், அவரது கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கூட்டணிக்கு அழைக்காததால் அதிமுக மீது கடும் வசவுகளை வீசி வருகிறார் பிரேமலதா. இந்நிலையில், அவரது கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேமுதிகவின் கொடி நாள் நேற்று தேமுதிகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரச்சார வேனில் ஏறி, கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கையசைத்தார். அதன்பின் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

.

இந்நிலையில் தேமுதிகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு 75 வாகனங்களில் ஊர்வலமாக சென்ற விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட தேமுதிகவினர் 200 பேர் மீது விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!