தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை குழு! பரிதாபகரமான நிலையில் எல்.கே.சுதீஷ்!

By Selva KathirFirst Published Jan 26, 2019, 9:38 AM IST
Highlights

தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்து 48 மணி நேரத்தை கடந்த நிலையிலும் யாருடன் பேசுவது என்று தெரியாமல் சுதீஷ் உள்ளிட்டோர் தவித்து வருகின்றனர்.

தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்து 48 மணி நேரத்தை கடந்த நிலையிலும் யாருடன் பேசுவது என்று தெரியாமல் சுதீஷ் உள்ளிட்டோர் தவித்து வருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் வரை தே.மு.தி.கவிற்கு இருந்த மவுசே வேறு. கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கேப்டன் தொலைக்காட்சியில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க அறிக்கை வெளியான உடன் அதனை பார்த்து பல தொலைக்காட்சிகளும் அந்த செய்தியை பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டன. ஆனால் இந்த முறை இப்படி ஒரு குழு அமைத்துள்ளதாக தே.மு.தி.க நிர்வாகிகள் ஒவ்வொரு தொலைக்காட்சியாக அழைத்து கூறியும் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.

இதற்கு காரணம் தே.மு.தி.க யாருடன் எந்த கூட்டணி வைத்தாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நிலவும் பேச்சுகள் தான். தொலைக்காட்சிகள், ஊடகங்கள் தான் தே.மு.தி.கவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை கண்டுகொள்ளவில்லை என்றால், அரசியல் கட்சிகளும் இப்படித்தான் இருக்கின்றன. கடந்த முறை விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க நடையாய் நடந்த வைகோ கூட என்ன ஏது என்று விசாரிக்கவில்லையாம்.

 

மேலும் தே.மு.தி.கவை பொறுத்தவரை தி.மு.க – அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு அணி அமைக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அந்த கட்சி தற்போதும் தொடர்ந்து வருகிறதாம். அதனால் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க சுதீஷ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த கட்சிகளும் தாங்களாக இதுவரை தே.மு.தி.கவை அணுகவில்லையாம். 

இதனால் ஓரிரு நாளில் சுதீஷே தி.மு.க – அ.தி.மு.கவிற்கு அடுத்த நிலையில் உள்ள கட்சிகளின் தலைவர்களை சந்தித்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தாலும் யாரும் பாசிட்டிவான தகவல்களை தே.மு.தி.க தரப்புக்கு கூறவில்லை என்கிறார்கள். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை யாரிடமும் தொடங்கி எப்படி முடிப்பது என்று சுதீஷ் உள்ளிட்டோர் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளனராம்.

click me!