தேமுதிகவை வளைக்க பாஜக புதுத்திட்டம்… என்ன தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Mar 4, 2019, 8:16 AM IST
Highlights

அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவைக் கொண்டு வர பாஜக புதுத் திட்டம் ஒன்றைக் கூறியுள்ளது. இத் திட்டத்தால் தேமுதிக மகிழ்ச்சி அடைந்தாலும், அதனை ஏற்க அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன. அதே நேரத்தில் அந்தக் கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வர பாஜக பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 

ஆனால் பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என அக்கட்சி அடம் பிடிப்பதால் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. அதில், 'பா.ம.க.,வை விட, கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும்' என, விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ் பிடிவாதமாக உள்ளார். இதை, அ.தி.மு.க., தலைமை ஏற்கவில்லை. கடைசியாக, ஐந்து தொகுதிகள் ஒதுக்க, அ.தி.மு.க., முன்வந்துள்ளது.

இந்நிலையில், 'ஐந்து நாடாளுமன்றத்  தொகுதிகளை ஏற்கத் தயார்; அத்துடன், இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளில், ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம், ஓசூர் ஆகிய நான்கில், ஏதாவது இரண்டு தொகுதிகளை தரவேண்டும்' என, தே.மு.தி.க.,புதிய நிபந்தனை விதித்துள்ளது. இது அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதிமுக , பாஜக,  பாமக,  தேமுதிக , புதிய தமிழகம்' என அணி அமைந்தால் 25 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று மத்திய உளவுத் துறை அறிக்கை கொடுத்துளளதால் தேமுதிகவை விட்டுவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதையடுத்து தேமுதிகவை வளைக்க பாஜக புதுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது,.

அதன்படி தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதி,  ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்குவது எனவும் , தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் தேமுதிகவுக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் உறுதியாக தருகிறோம் என அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


ஐந்து சீட்டில் நீங்கள் ஒரு சீட் ஜெயித்தால் கூட அந்த ஒருவருக்கும் ராஜ்யசபா உறுப்பினருக்கும் என இரு மத்திய அமைச்சர் பதவிகளை தேமுதிகவுக்குத் தருகிறோம்' என்று பாஜக கடைசி கட்ட பேரத்தை நடத்தியிருக்கிறது.

பாமகவுக்குக் கூட கொடுக்காத இந்த அதிரடி ஆஃபரை தேமுதிகவுக்குக் கொடுத்திருக்கிறது பாஜக. இதற்குப் பின்னும் விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என பாஜக காத்திருக்கிறது.

click me!