வலிய வந்து மாட்டிக் கொண்ட ராமதாஸ்...!! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய திராவிடர் கழகம்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 6, 2020, 12:10 PM IST
Highlights

அறிவியல் கல்லூரியும், பொறியியல் கல்லூரியும், அறக்கட்டளை பெயரில் உள்ளதா  - மருத்துவரின் மனைவியின் பெயரில் உள்ளதா? ஊரே கை கொட்டி சிரிக்கிறது - கட்சிக்காரர்களே மண்ணை வாரி இறைக்கிறார்கள்? ஏமாந்து விட்டோமே என்று கதறுகிறார்கள்.

திரௌபதி' திரைப்படம் ஒரு ஜாதி வெறி திரைப்படம் என்று கி. வீரமணி சொல்லி விட்டாராம். அப்படியே துள்ளிக் குதிக்கிறார் திண்டிவனம் மருத்துவர் இராமதாசு. 'திரௌபதி' படம் ஜாதி வெறி திரைப் படம் என்றால் டாக்டருக்கு என்ன வந்தது? ஓ, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறாரா - குற்றம் உள்ள நெஞ்சம் குறு குறுக்கத்தானே  செய்யும்! அப்படம் ஜாதி வெறிப் படமா இல்லையா என்பது - எச். ராஜா போன்ற சங்கிகள் பாராட்டி சொல்லியதிலிருந்தே தெருவுக்கு வந்து விட்டது. அந்தப் படம் குறித்து ஆசிரியர் வீரமணி எங்கே சொன்னார்?  என்ன சொன்னார்?  என்பது ஒருபுறம் இருக் கட்டும். அவர் கூறியது தவறு என்று பட்டால் கருத்து ரீதியாக மறுக்க முடியாத அளவுக்குக் கருத்து வளம் குன்றி விட்டதா மருத்துவருக்கு? "தமிழ்நாட்டில் எல்லா ஜாதிகளையும் ஒழித்து விட்ட பெருமை கி. வீரமணி யையே சாரும். அதற்காக அவருக்கு ஜாதிகளை ஒழித்த சாதனையாளர்(?) என்ற பட்டத்தைக்  கொடுக்கலாம்" என்று சிபாரிசு செய்துள்ளார். 

வீரமணி ஜாதி ஒழிப்பு வீரரா, இல்லையா என்பது ஊர் உலகத்திற்கே தெரியும். இந்த வகையில் டாக்டர் ராமதாஸ்  எப்படிப்பட்டவர் என்பதும் நாட்டுக்கே தெரிந்த விடயமே! ஜாதிக்காக ஒரு அமைப்பு - ஜாதியின் பெயரால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது என்பதால்  மக்களை ஏமாற்றிட இன்னொரு பெயரில் இன்னொரு கட்சி.  இந்தத் தந்திரம் எல்லாம் எடுபடாது. திராவிடர் கழகத் தலைவர் மீதான ஆத்திரம் இத்தோடு முடிந்து விட்டதா? "பெரியார் விட்டுச் சென்ற பல்லாயிரம் கோடி சொத்துக்களை சுரண்டி தின்றதைத் தவிர  இவர்கள் செய்த சேவை என்ன?" என்று கேள்வி  வேறு கேட்கிறார். பெரியார் அறக்கட்டளை எந்தப் பணிகளை எல்லாம் செய்கிறது என்பதும் உலகறிந்த ஒன்றே! ஆனால் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் வேலையை டாக்டர் செய்ய ஆசைப்படலாமா? 

'வன்னியர் கல்வி அறக்கட்டளை' என்று துவங்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் வேட்டையாடி உருவாக்கப்பட்ட அந்த அறக்கட்டளையின் பெயர் மாற்றப்பட்ட மர்மம் என்ன? அது மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று தனது பெயரால் மாற்றிக் கொண்டதும் -கோனேரிகுப்பத்தில் உள்ள அறிவியல் கல்லூரியும், பொறியியல் கல்லூரியும், அறக்கட்டளை பெயரில் உள்ளதா  - மருத்துவரின் மனைவியின் பெயரில் உள்ளதா? ஊரே கை கொட்டி சிரிக்கிறது - கட்சிக்காரர்களே மண்ணை வாரி இறைக்கிறார்கள்? ஏமாந்து விட்டோமே என்று கதறுகிறார்கள்.ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக தோலுரித்துக் காட்டின. 

பாவம், மருத்துவர் இராமதாஸ் ரொம்பவும்தான் குழம்பிப் போயிருக்கிறார். "டாக்டருக்கு தேவை வைத்தியம்!" என்று எழுதியிருந்தோம் - இப்பொழுது முற்றிப் போய் விட்டது - அவசர உதவிக்கு மருத்துவர்கள் குழுவே தேவைப்படுகிறது. மக்கள் மத்தியில் செல்லாக் காசாக்கப் பட்டு சட்டமன்றத்தில் ஒரே ஒரு இடத்தைக் கூடத் தர முன் வராமல் தமிழக மக்கள் உதறித் தள்ளி விட்டனர். எவ்வளவுக் கோடிப் பணம் குவிந்தென்ன? அதிகாரப் பசியை அது தீர்க்குமா?அந்த வெறியில் ஏதேதோ கிறுக்குகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

வீரமணி செய்த சேவை என்ன என்று கேட்கிறார் இப்பொழுது! ஆனால் மருத்துவர் 'நிதானமாக, தெளிவாக இருந்தபோது வீரமணி என்னென்ன சேவை எல்லாம் செய்தார்கள்' என்று பட்டியலே போட்டுள்ளார். இதெல்லாம் அவருக்கு நினைவில் இல்லை - செலக்டிவ் அம்னீசியாவில் இருக்கிறாரோ! அது சரி, இராமதாஸ் சொல்லுவதற் கெல்லாம் பதில் எழுத வேண்டுமா என்று கேட்கலாம் - அதுவும் சரிதான் - என திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் கூறியுள்ளார்.  

click me!