மக்களை பிரித்து ஆட்சி செய்வது காங்கிரஸின் DNA-வில் உள்ளது… ராகுலுக்கு பிரதமர் மோடி பளீர் பதிலடி!!

Published : Feb 07, 2022, 08:47 PM ISTUpdated : Feb 07, 2022, 08:48 PM IST
மக்களை பிரித்து ஆட்சி செய்வது காங்கிரஸின் DNA-வில் உள்ளது… ராகுலுக்கு பிரதமர் மோடி பளீர் பதிலடி!!

சுருக்கம்

மக்களை பிரித்து ஆட்சி செய்வது காங்கிரஸின் டிஎன்ஏவில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மக்களை பிரித்து ஆட்சி செய்வது காங்கிரஸின் DNA-வில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, இங்கு ஒரே நாடு என்ற கொள்கை சரிபட்டுவராது. இங்கு இரண்டு இந்தியா உள்ளன. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சாரம் போன்ற எதுவும் தேவைப்படாமல் நாட்டின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய பணக்காரர்களுக்கென ஓர் இந்தியா உள்ளது. மற்றொரு இந்தியா ஏழைகளுக்கானது. இந்த இரு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்.

மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லையெனில் இனி மேட் இன் இந்தியா சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிறிய நடுத்தர தொழில்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும் வேளையில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இந்தியா மீது இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். பேச்சுவார்த்தை, உரையாடலில் சொல்வதென்றால் மாநிலங்கள் உடன் இணைந்த கூட்டணியே. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது. இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

 

அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென தனித்துவ பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் உள்ளன. உதரணமாக தமிழகத்திற்கு தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை. அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஒரே நாடு என்கிற கொள்கையை விமர்சித்த ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்த முயற்சிக்கிறது. நாட்டைப் பிரித்து ஆட்சி செய்ய விரும்புகிறது. மக்களை பிரித்து ஆட்சி செய்வது காங்கிரஸின் டிஎன்ஏவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!