சென்னையில் 2665 வாகனங்களில் இல்லத்திற்கே சென்று காய்கறிகள் விநியோகம்.. மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்.

By Ezhilarasan Babu  |  First Published May 24, 2021, 1:26 PM IST

சென்னையில் முழு ஊரடங்கால் மண்டலங்கள் வாரியாக காய்கறிகள் விநியோகம் செய்யும் பணி சென்னை கோயம்பேட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு 2665 வாகனங்களில் நேரடியாக மக்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.


முககவசம் முறையாக அணியாமல் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  பணிபுரியும் தொழிலாலிகளால் கொரனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நேரடியாக இல்லங்களுக்கு காய்கறிகளை விநியோகம் செய்யும் பணியை பொதுமக்கள் அறிந்து பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று மொத்தவிலை காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 

Latest Videos

undefined

சென்னையில் முழு ஊரடங்கால் மண்டலங்கள் வாரியாக காய்கறிகள் விநியோகம் செய்யும் பணி சென்னை கோயம்பேட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.சென்னையில் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு 2665 வாகனங்களில் நேரடியாக மக்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மொத்த விலை வியாபார சங்க தலைவர் முத்துக்குமார் அளித்த பேட்டியில்; பொது மக்கள் அரசாங்கம் சொல்வதை கட்டாயமாக கவனித்து செயல்பட வேண்டும் என்றும், பலமுறை எடுத்துக் கூறியும் நேற்று ஒரே நாளில் காய்கறிகளை அதிகமாக வாங்கிக் கொண்டதால் விலைகள் நேற்றைய தினம் அதிகரித்திருப்பதாக கூறினார். 

ஆனால் இன்று அதே காய்கறிகளில் விலை நான்கு மடங்கு விலை குறைந்து இருப்பதாகவும் கூறினார். மேலும், அங்கங்கே வாகனங்களில் காய்கறி விற்பனை செய்பவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஊராடங்கால் காய்கறிகள்  நேரடியாக இல்லத்திற்கு சென்று விநியோகம் செய்யும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர் என்ற அவர், இவர்களில் பலர் முறையாக முககவசம் அணியாமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் எச்சரித்துள்ளார். 

click me!