ஓடவும் முடியாது... ஒளியவும் முடியது... 17 பேருக்கு டி.டி.வி.தினகரன் வைக்கும் செக்..!

Published : Dec 14, 2018, 01:46 PM IST
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியது... 17 பேருக்கு டி.டி.வி.தினகரன் வைக்கும் செக்..!

சுருக்கம்

திகட்டத் திகட்ட திணறடித்த செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமானதையடுத்து அமமுகவில் இருக்கும் மற்றவர்களை தக்கவைக்க முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் அழைத்துப் பேசியிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

திகட்டத் திகட்ட திணறடித்த செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமானதையடுத்து அமமுகவில் இருக்கும் மற்றவர்களை தக்கவைக்க முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் அழைத்துப் பேசியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். 

அப்போது, ‘செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் சில எம்.எல்.ஏக்களும் நம்மை விட்டுப் போறதாக எனக்கு தகவல் வந்திருக்கு. நாம உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். 10 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகமாக மேல் முறையீடு செய்தால், அது எல்லோருக்கும் பொருந்தும். அப்படி இருக்கும்போது, செந்தில் பாலாஜி மட்டுமல்ல... யார் அணி மாறினாலும் அவங்க பதவியை இழக்க நேரிடும்.

 

 அதனால், மற்றவங்க அணி மாற யோசிப்பாங்க. அதனால நாம உடனடியாக மேல்முறையீடு செய்வதுதான் நல்லது... என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தங்க.தமிழ்ச்செல்வனோ, ‘இதையெல்லாம் பண்ணி யாரையும் தடுத்து நிறுத்த முடியாது. வெளிய போறதுன்னு முடிவு பண்ணின பிறகு ஏற்கனவே போன எம்.எல்.ஏ. பதவிய பத்தி எதுக்கு கவலைப்பட போறாங்க?’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். ‘அப்போ என்னதான் செய்யணும்?’ என்று தினகரன் கேட்டிருக்கிறார். 

எலெக்‌ஷன் வந்தால் செலவுகளை நீங்க பார்த்துக்குறதா 17 பேருக்கும் உத்தரவாதம் கொடுங்க. அதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறாங்க.. என்று சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன். 

அது எலெக்‌ஷன் வரும்போது பார்த்துக்கலாம். அதுக்குள்ள எதுக்கு அவசரப்படுறீங்க?’ என்று கடைசி வரை தினகரன் பண விஷயத்தில் பிடி கொடுக்கவே இல்லையாம். மேல் முறையீடு செய்யலாம் என்பதில் ஆர்வமாகியிருக்கிறார் தினகரன். இதனால், மீதமிருக்கும் 17 பேரை தக்கவைக்கலாம் என அவர் கருதுகிறார். பண விஷயத்தில் தினகரன் கறாராக இருப்பதால் அமமுகவில் மேலும், பல விக்கெட்டுகள் சரிய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அமமுக வட்டாரத்தில்...  

PREV
click me!

Recommended Stories

என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!
பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!