"அப்போலோவில் அம்மா" பத்தி நாங்க சொன்னது "எல்லாமே பொய்"..! முந்திக்கொண்டு உண்மையை கொட்டிய சீனி..!

Asianet News Tamil  
Published : Sep 23, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
"அப்போலோவில் அம்மா" பத்தி நாங்க சொன்னது "எல்லாமே பொய்"..! முந்திக்கொண்டு உண்மையை கொட்டிய சீனி..!

சுருக்கம்

dindukkal seenivasan says everything about jayalalitha

 "அம்மா" பத்தி நாங்க சொன்னது "எல்லாமே பொய்"..! முந்திக்கொண்டு உண்மையை கொட்டிய சீனி..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா  இறப்பிற்கு பின்  தமிழக அரசியல் ஆட்டம்  கண்டு  வருகிறது. அதன்  ஒரு பகுதியாக, அம்மாவின்  இறப்பிற்கு  என்னதான்  காரணம் என  இதுவரை  சரியான  விளக்கம்  இல்லை.இருந்தபோதிலும் ,அம்மா மருத்துவமனையில்  இருந்த போது, அவர் நலமாக உள்ளார் நாங்கள் நேரில் பார்த்தோம், இட்லி  சாப்பிட்டார் தண்ணீர்   குடித்தார் என பலரும்  வாய்  வசனம் பேசி  வந்தனர். 

அதுமட்டுமல்லாமல், இவர்கள் தான் இப்படி பேசினார்கள் என்றால், அருண்ஜெட்லி  முதல்  ராகுல்காந்தி வரை அனைவருமே  பொய் தான்  சொன்னார்களா என சந்தேகம் எழும் அளவிற்கு  தற்போது திண்டுக்கல்  சீனிவாசன் அனைத்தையும் மனம்  திறத்துவிட்டார்

அதாவது , நீதி விசாரணை அமைத்து  அம்மாவின்  இறப்பு  குறித்த  உண்மை வெளிவரும் தருவாயில், முதலில்   மாட்டிக்கொள்வது  சீனிவாசன் தான்  என்ற  நிலை  உருவாகி உள்ளது. ஏனென்றால்  இவற்றின் கூவல்  தான் அதிகம் இருந்தது.இது ஒரு பக்கம் இருக்க...சும்மா இருந்த  சங்கை  ஊதி கெடுத்த  மாதிரி, தினகரன்  தரப்பிலிருந்து சீனிவாசன்  தான்   மாட்டிக்கொள்வார்  என  சொல்லிக்கொண்டே  இருக்க, ஐயோ சாமி எப்படியாவது  தப்பித்தால்  போதும்  என  நினைத்த திண்டுக்கல் சீனிவாசன்  தற்போது  உண்மையை  டமார்  என போட்டு உடைத்தார். 

அவர் பேசும்  போது, என்ன  மன்னித்துவிடுங்கள்,  அம்மாவை  பற்றி நாங்கள் சொன்னது எல்லாமே  பொய். நான் மட்டும் இல்லை , ராஜ் நாத் சிங் முதல்  ராகுல் காந்தி வரை  யாருமே  அம்மாவை  பார்க்க வில்லை  என்பது தான்  உண்மை .. நாங்கள் அனைவருமே , மருத்துவமனைக்குள்  சென்றாலும், வெளியில் போடப்பட்டிருக்கும் இருக்கையில்  கை கட்டிதான் அமர்ந்தோமே  தவிர ..  சத்தியமா அம்மாவை  பார்க்கவே  இல்லை  என  உண்மையை  போட்டு உடைத்தார்  திண்டுக்கல் சீனிவாசன் 
சீனிவாசனின் இந்த  தகவல் தற்போது  அரசியல் வட்டாரத்தில்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது 
 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!