
நடிகர் கமல் ஹாசனின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றுள்ளதாக தனது நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன், அண்மை காலமாக சமூக மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
தமிழகத்தில், நடிகர் ரஜினி காந்துடன், இணைந்து அரசியலில் குதிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடியின் தூய்மை திட்டத்துக்கு ஆதரவு நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கமலை அரசியலுக்கு அழைத்தார் கெஜ்ரிவால். நாங்கள் என்ன பேசியிருப்போம் என்பது குறித்து நீங்களே யூகித்து இருப்பீர்கள் என்றும் கமல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விவேக், கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல், அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன் என்றும் இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன் என்றும் விவேக் கூறியுள்ளார்.
வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே என்றும் நடிகர் விவேக் மற்றொரு டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.