பொதுக்குழுக்கு எதிராக மேல் முறையீடா? பட்டை நாமம் தான் கிடைக்கும்.!ஓபிஎஸ் அணியை அலறவிடும் திண்டுக்கல் சீனிவாசன்

By Ajmal Khan  |  First Published Aug 30, 2023, 8:32 AM IST

தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு போகும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


மீண்டும் அதிமுக ஆட்சி- தங்க தேர் இழுத்து வழிபாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆகஸ்ட் 20 மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி  மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி அமையவும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், அழகர் கோயில் கருப்புசாமி கோவிலில் சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து, அறுபடை வீட்டின் கடைசி படை வீடான பழமுதிர்ச்சோலையில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு பூஜை செய்து ,தங்கத்தேர்  இழுத்து சிறப்பு வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

இந்த நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர், முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கழக அம்மா பேரவை செயலாளர் ஆர். பி.உதயகுமார்,  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

திமுக ஆட்சி - மோசமான ஆட்சி

இதனை தொடர்ந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வரவேண்டும் என்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக சார்பாக பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குறிப்பாக மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதனை தொடர்ந்து இங்கு முருகப்பெருமானின் கடைசி படை வீடான பழமுதிர்ச்சோலையில் தங்கத் தேர் இழுத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் சிறப்பாக மழை பெய்தது.  தற்போது எடப்பாடியார்க்கு வேண்டுதல் செய்த போது மீண்டும் அவர் ஆட்சி அமையும் என இறைவன் அருளாட்சி புரியும் வகையில் மழை பெய்துள்ளதாக கூறினார். 


 ஓபிஎஸ் அணிக்கு தோல்வி தான் கிடைக்கும்

தற்போது தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு போகும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும். என தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தற்போது துரோகிகள் தொடர்ந்து அப்பீல் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பட்டைநாமம் தான் கிடைக்கும். சில துரோகியில் தவிர அனைவரும் மீண்டும் கழகத்தில் இணையலாம் என எடப்பாடியார்  கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்றைக்கு மீண்டும் அதிமுகவில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர் என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆச்சு! சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்குற சொன்னீங்களே என்னவானது?அண்ணாமலை

click me!