"முதலமைச்சரை வாய்தவறி '420' என சொல்லிவிட்டார் டிடிவி" - சமாளிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்!!

Asianet News Tamil  
Published : Aug 12, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
"முதலமைச்சரை வாய்தவறி '420' என சொல்லிவிட்டார் டிடிவி" - சமாளிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்!!

சுருக்கம்

dindigul seernivasan about ttv dinakaran

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், 420 என வாய்தவறி சொல்லிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அணிக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணைத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தற்போது அதற்கு எதிராக செயல்படுவதால், அவரை 420 என குறிப்பிட்டார்.

அதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,தினகரன் '420' என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுவதாக தெரிவித்தார்.இதையடுத்து இருதரப்பினரும் கடுமையாக வார்த்தைகளால் மோதிவருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், 420 என வாய்தவறி சொல்லிவிட்டதாக கூறினார்.

அதிமுகவின் இரு அணிகளும் தற்போது பிரிந்திருந்தாலும், நாங்கள் அனைவரும் பங்காளிகளும் என்றும், விரைவில் இரு தரப்பினரும் இணைந்து விடுவோம் என சீனிவாசன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!
ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்