
திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்.20-ம் தேதியில் இருந்து தாடங்குளம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணையிலிருந்து தடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு அப்பகுதி வேளாண் மக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும் 20 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தண்ணீர் திறப்பதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.