
அதிமுகவின் முக்கிய அங்கமான, ஜெயா டி.வி யின் நிர்வாக பொறுப்பை கைப்பற்ற தினகரன் மனைவி அனுராதா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதனால், இளவரசியின் மருமகளும் விவேக்கின் மனைவியுமான கீர்த்தனா ஜெயா டி.வி யில் இருந்து ஓரம் காட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயா டி,வி யின் நிர்வாக பொறுப்புக்களை தினகரனின் மனைவி அனுராதாதான் ஏற்கனவே கவனித்து வந்தார்.
ஆனால், சசிகலா உள்பட அவரது உறவினர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டபோது, ஜெயா டி.வி நிர்வாக பொறுப்பில் இருந்து அவர் வெளியேற நேர்ந்தது.
அதன்பிறகு, ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அனுராதா உள்ளிட்ட யாருமே போயஸ் கார்டன் கார்டன் பக்கம் தலை காட்டவே இல்லை.
ஆனால், ஜெயலலிதா இறந்த பிறகு,ஒன்று கூடிய அனைவரும் போயஸ் கார்டனில் குவிய ஆரம்பித்து விட்டனர்.
ஆனாலும், தினகரன் மனைவி அனுராதா, ஜெயா டி.வி. பக்கம் வரவே இல்லை. தற்போது, ஜெயா டி.வி. நிர்வாக பொறுப்புகளை, விவேக் மனைவியான கீர்த்தனா கவனித்து வருகிறார்.
கீர்த்தனா, இதுவரை நேரடியாக ஜெயா டி.வி. அலுவலகத்துக்குச் செல்லாமல், கார்டனில் இருந்தபடியே பேசுவது... தவறை சரி செய்ய சொல்வது என்று இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், திடீரென அனுராதா மீண்டும் ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் பேசியிருக்கிறார்.
மேலும், தினகரனின் பிரச்சாரம் எதுவும் மிஸ் ஆகாமல் நேரலையில் வரவேண்டும், கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி விட்டு வந்திருக்கிறார்.
எனவே, தேர்தல் முடிந்ததும் அனுராதா ஜெயா டி.வி நிர்வாகத்தை கைப்பற்றி விடுவார் என்றே சொல்லப்படுகிறது.
விவேக் மனைவி கீர்த்தனா, ஒருவேளை அதிலிருந்து அகற்றப்படலாம். அல்லது டம்மியாக வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.