மோடியை தெறிக்க விடும் தினகரனின் தீர்ப்பு: டெல்லியில் கிலி கிளப்பிய தமிழக கவர்னர்.

First Published Apr 4, 2018, 4:52 PM IST
Highlights
Dinakaran waiting for 18 MLAs disqualified case


தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் கழற்றிவிடப்பட்டு, புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அறிவிப்பு வெளியானதும் ‘ஊழல் பேர்வழிகளுக்கு எதிரான க்ருஷேடர்! களையெடுப்பதில் கத்தி’ என்று சுப்பிரமணியன்சுவாமி புரோஹித்தை புகழ்ந்து தள்ளினார். எடப்பாடி, பன்னீர் அண்ட்கோவிற்கு வயிற்றில் புளி கரைந்தது.

பதவியேற்ற கவர்னர் அதிரடியாக தமிழக ராஜ்பவனில் சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வந்தார், கோயமுத்தூரில் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்! கொண்டாடியது தமிழகம். மீடியாக்கள் அவரை புரண்டு புரண்டு புகழ்ந்தனர்.

ஆனால் வந்த புதிதில் சிலுசிலுப்புகளை காட்டிவிட்டு வழக்கம்போல் செட்டிலாக துவங்கினார் கவர்னர்.இந்த நேரத்தில் தினகரனின் பின்னால் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்த மைனாரிட்டி கவர்மெண்டை கவர்னரே கலைச்சுடுவார்! என்று நம்பினார் ஸ்டாலின். ஆனால் கவர்னர் கண்டுகொள்ளவில்லை.  மண்டைகாய ஆரம்பித்தது எதிர்க்கட்சி. பி.ஜே.பி.யின் முழு ஆசீர்வாதத்துடன் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத விவகாரத்தில் மிக முழுமையாக மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்கிறது தமிழகம். எதிர்கட்சிகள் நடத்தும் தொடர் போராட்டங்கள் பத்தாது என்று, ஆளுங்கட்சியும் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தது அதிர்ச்சியே.

இந்நிலையில் திடீரென டெல்லி கிளம்பி போனார் தமிழக கவர்னர் புரோஹித். பிரதமர் மோடியுடன் சுமார் கால் மணி நேரம் தமிழக நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

கவர்னரின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சி அதிர்ந்து போய்க் கிடக்கிறது.
இந்நிலையில் கவர்னரின் டெல்லி விசிட் தொடர்பாக டெல்லியில் கசியும் தகவல்கள் இப்படியாக விரிகின்றன...”பிரதமரை சந்தித்த கவர்னர் பகிர்ந்த விஷயங்களில் அதிகமாக இருந்தது தினகரன் பற்றித்தான். அதாவது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

என்னதான் தீர்ப்பு ரகசியமானது என்றாலும், பல நுணுக்கங்களையும் பொதுவான சட்ட நியாயத்தையும் வைத்துப் பார்க்கையில் தினகரனுக்கு சாதகமாகவே இந்த தீர்ப்பு வர அதிகம் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. இதைத்தான் பிரதமரிடம் நுணுக்கமாக விளக்கியிருக்கிறார் கவர்னர்.தீர்ப்பு இப்படி வந்தால் நிச்சயம் தினகரன் ஆட்சியை கலைக்கும் வேலைகளில் மளமளவென இறங்குவார். அவரோடு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இரண்டும் கைகோர்த்து இறங்கும். அப்படி இறங்கையில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் பதற்றம் ஏற்படும்.

ஏற்கனவே நம் தயவில்தான் மைனாரிட்டி அரசு தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்று மக்கள் பேசுகிறார்கள். தீர்ப்பும் இப்படி வந்த பிறகு நாம் அதை தாங்கிப் பிடித்தால் மக்கள் மிகவும் நம் மீது அதிருப்தியடைய வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் தேர்தல்களில் தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு எதிர்மறை முடிவுகளைத்தான் தரும்.
என்று மளமளவென பிரதமரிடம் விஷயங்களை கட்டி அடுக்கிவிட்டார் கவர்னர்! தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் எனும் தகவல் பிரதமர் வட்டாரத்தை எரிச்சலில் தெறிக்க வைத்திருப்பதாகவே தெறிகிறது.”

இதுக்கு ஒரு மாற்று வழியை இந்நேரம் கண்டுபிடிக்காமலா இருந்திருந்திருப்பார் நமோ!?

click me!