
அதிமுகவின் உண்ணாவிரத பந்தலில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்றும், பாஜகவிடம் பழனிசாமிக்கு எவ்வளவு பயம் என்பதை அவரது பேச்சே உணர்த்துகிறது என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னறிவிப்பின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். உண்ணாவிரத முடிவில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, காவிரி பிரச்சனைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம் என்றும், திமுக ஆட்சியில் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இன்றைக்கு நாம் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று கூறினார். மேலும் சர்காரியா கமிஷனுக்கு பயந்துதான் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் திமுக துரோகம் செய்ததாகவும் கூறினார்.
பாஜகவிடம் பழனிசாமிக்கு எவ்வளவு பயம் என்பதை அவரது பேச்சே உணர்த்துகிறது என்றும், முதலமைச்சர் பழனிசாமி கடைசிவரை திமுக, காங்கிரசை மட்டுமே குற்றம் சாட்டினார் என்றார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்த பாஜக அரசு பள்ளி எந்த கருத்தையும் கூறவில்லையே என்றும் தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டினார்.