தினகரன் அணியின் ‘ரெட்டை குழல் துப்பாக்கி’: குண்டுகளை கழட்டுமா எடப்பாடி போலீஸ்!?

First Published Feb 15, 2018, 3:08 PM IST
Highlights
Dinakaran teams double hole gun


தேனி மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட மேடையில் ‘நானும் பன்னீரும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்படுகிறோம்’ என்று எடப்பாடி சொன்னாலும் சொன்னார்! ஆளாளுக்கு அவர்களை வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தினகரன் அணியிலும் ‘ரெட்டை குழல் துப்பாக்கி’ என்று இருவர் வர்ணிக்கப்படுகின்றனர். அவர்கள், ‘நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி’ இருவரும்தான்.

இப்போதெல்லாம் இவர்கள் இருவரையும்தான் ஒன்றாகதான் பொதுக்கூட்டத்துக்கு புக் செய்கின்றனர் பல மாவட்டங்களை சேர்ந்த தினகரன் ஆதரவு நிர்வாகிகள். காரணம், எதையும் பற்றி கவலைப்படாமல் பழனிசாமி - பன்னீர் தரப்பை இவர்கள் இருவரும் கண்மூடித்தனமாக காய்ச்சி எடுப்பதினால்தான்.

இரு முதல்வர்களையும் கடுமையாக விமர்சித்து நாஞ்சிலும், புகழேந்தியும் பேசினால் அது தொண்டர்களுக்கு உற்சாகத்தை தருவதோடு, மக்களும் ரசித்து கேட்கிறார்கள்! என்று சொல்கிறார்கள் நிர்வாகிகள். இதன் மூலம் ஆளும் அணிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பு மன ஓட்டத்தை உருவாக்குவதே பிளான்.

ஆனால் தினகரன் அண்ட்கோவின் இந்த திட்டத்தை புரிந்து கொண்டிருக்கும் ஆளும் தலைமை ‘வாய்ப்பு கிடைக்கையில் எல்லாம் இருவர் மீது வழக்குகள் போட்டுத் தள்ளுங்கள்.’ என்று உத்தரவிட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தினகரன் அணியின் ரெட்டை குழல் துப்பாக்கியின் பியூஸை பிடுங்க ரெடியாக நிற்கிறது போலீஸ்.
இப்படித்தான் சமீபத்தில் கோயமுத்தூரில் சம்பத், புகழேந்தி இருவரையும் இணைத்து ஒரு கூட்டத்தை நடத்தியது தினகரன் அணி.

பிளக்ஸ் வைப்பதில் துவங்கி பல விஷயங்களுக்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் அதை மீறி அதகளப்படுத்தினர் தினா டீமின. இருவரும் மேடைக்கு வந்த போது பட்டாசு வெடிக்க முயற்சித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் பட்டாசை எடுத்துக் கொண்டு ஓடிப்போய்விட்டார். இதில் டென்ஷனான நாஞ்சில் சம்பத், தன் பேச்சின்போது “ஏய் கோவை போலீஸு, உனக்கென்ன காஷ்மீர் போலீஸுன்னு நினைப்பா? எடுத்துட்டு ஓடுன பட்டாசை ஒழுங்கா கொண்டாந்து கொடுத்துடு.

எத்தனை நாளைக்கு இந்த ஆட்டைத்தை போடுவீங்க? அடுத்து எங்க ஆட்சிதான். இனியெல்லாம் பொதுக்கூட்டம் நடத்த உங்களோட அனுமதிக்கு காத்திருக்க மாட்டோம். தடையை மீறி நடத்துவோம்.” என்று போலீஸை போட்டு உரசித்தள்ளினார். ஆனால் நாஞ்சில் சம்பத் 10 மணியை தாண்டியும் மேடையில் பேசினால் மைக்கை ஆஃப் செய்து அவர் மீது வழக்கு போடவும், அப்போது பிரச்னை ஏற்பட்டால் அவரை கைது செய்யவும் திட்டமிட்டிருந்ததாம் போலீஸ். ஆனால் நாஞ்சில் சம்பத்தோ பத்து மணிக்குள் தன் பேச்சை முடித்துவிட்டு போலீஸுக்கு பல்பு கொடுத்துவிட்டார்.

ரெட்டை குழல் துப்பாக்கியாக அழைத்துவரப்பட்ட நாஞ்சிலும், புகழேந்தியும் அரசுக்கு எதிராக பொளந்து கட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பத் மட்டுமே சதாய்த்தா. புகழேந்தி சொதப்பிவிட்டாராம். ஆனால் அமைச்சர்களை ‘நீ! அவன்! இவன்!’என்று ஏக ஒருமையில் புகழேந்தி விளாசி தள்ளியதில் தினகரன் அணி நிர்வாகிகள் ஹேப்பியாம்! அதேவேளையில் சம்பத் எப்படி குறிப்பிட்ட நேரத்தில் பேச்சை முடித்து எஸ்கேப் ஆனாரோ அதேபோல் புகழேந்தியும் அமைச்சர்களை வீரியமாக சீண்டிப் பேசுகையில் அவர்களின் பெயரை நேரடியாக சொல்லாமல், கோடு வேர்டுகளில் சொல்லி எஸ்கேப் ஆகிக் கொண்டார்.

இந்நிலையில், கோயமுத்தூரில் தப்பிவிட்டாலும் கூட அடுத்தடுத்த நிகழ்வுகளில், எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வழக்குகளைப் போட்டு தாளித்து தினகரன் அணியின் ரெட்டை குழல் துப்பாக்கிகளான சம்பத் மற்றும் புகழேந்தி இருவரையும் பியூஸ் பிடுங்கி விடுவதில் குறியாய் இருக்கிறது தமிழக போலீஸ்!

click me!