
ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பரபரப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
முக்கிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.
குறிப்பாக அதிமுகவின் முதன்மை அணியாக பார்க்கப்படும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு நிச்சயம் இது அக்னிபரீட்சை தான்.
மதுசூதனன், என்.எம்.கணேஷ், தீபா ஆகியோரை பொறுத்தவரை வெற்றி பெற்றால் ஓகே இல்லையென்றாலும் ஓகே என்ற மூடில் இருக்கிறார்களாம்.
ஆனால் டிடிவி தினகரனுக்கோ நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் தனது புஜபல பராக்கிரமங்களை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்றே ஆகி விட வேண்டும் என்ற பிராயர்த்தன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
உயர்பண மதிப்பிழப்பு விவகாரத்தால் பணப்பட்டுவாடா முழு வீச்சில் நடத்த முடியாத நிலைக்கு அரசியல் கட்சியிணற தள்ளபட்டுள்ளனர்.
மேலும் எல்லோரும் பணம் கொடுப்பதால் தினகரன் தரப்பு சற்று வித்யாசமாக யோசித்து தங்க நகைகளை ஆர்கே நகரில் வாரி இறைப்பதாக கூறப்படுகிறது.
2 வார்டுக்கு ஒரு அமைச்சர் ஒரு எம்பி ஒரு எம்எல்ஏ ஒரு மாவட்ட செயலாளர் என கையிலெடுத்து பிரித்து மேய்ந்து வருகின்றனர் அதிமுக அம்மா அணியினர்.
வெற்றிக்கனியை பறிக்கும் பதற்றத்துடன் முழு வீச்சில் பணப்பட்டுவாடாவில் இறங்கியுள்ள போதிலும் ஓபிஎஸ் அணியினரும் திமுகவினரும்.
எங்கெல்லாம் அம்மா அணியினர் பணம் கொடுக்கின்றனரோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து சென்று தேர்தல் பார்வையாளர்களிடம் பிடித்து கொடுக்கின்றனர்.
அந்த வகையில் தண்டையார்பேட்டையை அதிமுக அணியை சேர்ந்த பகுதி செயலர் சந்தானம் என்பவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பொது தேர்தல் பறக்கும் படையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுவரை தினகரன் தரப்பிலிருந்து மட்டும் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து தினகரன் தரப்பு ஆட்கள் கைது செய்யப்பட்டு வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ள தொப்பி அணியினர், திமுக மற்றும் ஓபிஎஸ் ஆட்கள் கடைசி 4 நாட்கள் எப்படி பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று பார்த்து விடுகிறோம் என்று மார்தட்டுகின்றனர்.