“அது எனக்கு மட்டும் தெரியும்...” உங்க விளையாட்ட என்கிட்ட வச்சுக்காதிங்க... சொந்த மாமாவை தில்லாக மிரட்டும் தினகரன்!

 
Published : Apr 25, 2018, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
“அது எனக்கு மட்டும் தெரியும்...” உங்க விளையாட்ட என்கிட்ட வச்சுக்காதிங்க... சொந்த மாமாவை தில்லாக மிரட்டும் தினகரன்!

சுருக்கம்

Dinakaran slammed Sasikalas brother Divakaran

சொந்த அக்காவை இதுவரை பெங்களூரு சிறைக்குச் சென்று பார்க்காதவர் தான் இந்த திவாகரன். திவாகரன் சசிகலாவை எப்படிப் பேசினார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் என தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.

சசிகலா அக்காள் மகன் தினகரனுக்கும் தம்பி திவாகரனுக்கும் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அரசியல் சண்டை அதிகரித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திவாகரன், “தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நாங்கள் இல்லை, அதிமுக அம்மா அணியில்தான் இருக்கிறோம்.

தமிழகத்தில் தேர்தல் நடந்தால், தேவைப்படும் பட்சத்தில் தனித்துப் போட்டியிடுவோம். பங்கு கேட்பார்கள் என்ற பயத்தில், அதிமுக என்ற சுவடே இருக்கக் கூடாது எனத் தினகரன் முயற்சிக்கிறார் என தாறுமாக விமர்சனத்தை அடுக்கினார்.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன்,  இவர் பதவி ஆசையில் திரிகிறார், திவாகரனுக்கு சசிகலா மீதுதான் கோபம். அந்த கோபத்தை என் மீது வெளிப்படுத்துக்கிறார் திவாகரன். குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மதிக்கலாம். ஆனால் அவர்களுக்கு கட்டுப்பாட்டு நடக்க முடியாது.

மேலும், குடும்பமும் அரசியலும் வேறானவை. இதே திவாகரன் சசிகலாவை எப்படிப் பேசினனர் என்பது எனக்கு தெரியும். சொந்த அக்காவை இதுவரை சசிகலாவை பெங்களூரு சிறைக்குச் சென்று பார்க்காதவர் தான் இந்த திவாகரன். சசிகலாவின் சகோதரர் என்பதைத் தாண்டி கட்சிக்கும் திவாகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு, கட்சியைத் தனிநபராக ஆட்டிப்படைக்க நினைக்கிறார் திவாகரன்.  அமமுகவை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் திவாகரன். அது நடக்காது. இவ்வாறு தினகரன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு