
எப்போதும் பவ்யமாக பேசும் அமைச்சர்களில் சிலர், திடீரென, துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று வெளிப்படையாக கூறியதை கேட்டு அதிகமாகவே ஆடிப்போயுள்ளார் தினகரன்.
விவாதம் பெரிதாவதற்குள் தம்பிதுரை குறுக்கிட்டு பேசி, ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
அதை தொடர்ந்து கடைசியாக அமைச்சர்களிடம் பேசிய தினகரன், எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது. சின்னம்மா சொன்னதால்தான் நான் இந்த இடத்திற்கே வந்துள்ளேன் என்றார்.
மேலும், ஜெயலலிதா அம்மா கட்டி காத்த கட்சியை, காப்பாற்றவேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது. எப்போதும் நான் உங்களுக்கு உண்மையாகவே இருப்பேன்.
என்னை பொறுத்தவரை நீங்கள் அனைவரும் எனக்கு ஒன்றுதான். நான் யாருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதேபோல், யாரையும் புறக்கணிக்கவும் இல்லை.
அப்படி ஏதாவது உங்களுக்கு பிரச்சினை இருந்தால், அதை என்னிடம் வெளிப்படையாகவே பேசுங்கள், எதையும் மனம் விட்டு பேசினால்தான் தீர்க்க முடியும். நமக்குள்ளும் ஒரு தெளிவு இருக்கும் என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் தினகரன்.