எடப்பாடிய அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல பன்னீரு கதையை முடிக்கணும்!! தளபதிகளுடன் ப்ளான் போடும் தினா

By sathish kFirst Published Oct 7, 2018, 12:28 PM IST
Highlights

அமைதிப்படை ‘ அமாவாசையின் உண்மையான வாரிசு யார் என்கிற போட்டி ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தினகரனுக்குமிடையில் நாளுக்குநாள் வலுத்துவருகிறது.

அமைதிப்படை ‘ அமாவாசையின் உண்மையான வாரிசு யார் என்கிற போட்டி ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தினகரனுக்குமிடையில் நாளுக்குநாள் வலுத்துவருகிறது. பன்னீர் தன்னை சந்தித்த விவாகாரத்தை மீடியாவில் பகிரங்கமாக போட்டு உடைத்த கையோடு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்த தினகரன் நடந்த கதைச் சுருக்கத்தை சசிகலாவிடம் சொல்ல உற்சாகமாய்க் கேட்டுக்கொண்டிருந்த அவர் ‘ நாம நினைக்கிறத வைட பன்னீரு பயங்கரமான ஆளு. தன்னையும் பதவியையும் காப்பாத்த எந்த அசிங்கத்துக்கும் போவாரு.உஷாரு’ என்று எச்சரித்து அனுப்பிவைத்தாராம்.

பெங்களூரு சந்திப்பு இருக்கட்டும். நேற்று முன் தினம் வரை பத்துப் பைசா பெறாத பன்னீர்-தினகரன் சந்திப்பு திடீர் அரசியல் முக்கியத்துவம் பெற்றது எப்படி?

தினகரன் - பன்னீர் சந்திப்பு 2017ல் நடந்தது என்பது அவர்கள் இருவருமே மறந்து போனது. 2017 ஜூலை 12ஆம் தேதி முதல்வர் சமூகத்தைச் சேர்ந்த கான்ட்ராக்டரான தென்னரசுவின் வீட்டில்தான் இருவரும் சந்தித்துள்ளார்கள். அந்த வீடு ஏற்கனவே ஓபிஎஸ், தினகரன் இருவருக்கும் நல்ல பழக்கமான வீடுதான். வீட்டுக்கு வரும்போது தங்க தமிழ்செல்வன்தான் பன்னீரை ரிசீவ் செய்ததாகச் சொல்கிறார்கள். அந்த வீட்டில் முகப்பிலும் போர்டிகோவிலும் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இருவரும் சந்தித்த அறையிலும் கூட சிசிடிவி கேமரா இருந்ததாகச் சொல்கிறார்கள். இரவு நேரத்தில் பன்னீர் தனது நண்பரின் காரில் தினகரன் காத்திருந்த வீட்டுக்குச் சென்றுள்ளார் இருவரும் சந்திக்கும் சம்பவம் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் தெரியும் என்கிறார்கள். அதனால்தான் ஓ.பன்னீர் செய்தியாளர்களை சந்திக்கும்போது பாண்டியராஜனையும் கூடவே உட்கார வைத்துக்கொண்டாராம்.

அந்த சந்திப்பில் முக்கியமான சங்கதிகள் எதுவும் பேசப்படாத நிலையில், அடுத்த வாரமே தனது தம்பி ஓ.பி.ராஜாவை அனுப்பி தினகரனை சந்திக்கவைத்துள்ளார் ஓ.பி.எஸ்.

அபார்ட்மெண்ட் வாசலுக்கே வந்து பன்னீர் தம்பியை வீட்டுக்கு அழைத்துப் போனவர் இப்போதைய தினகரனின் தீவிர விசுவாசியான  வெற்றிவேல். அதன் பிறகு பன்னீரின் தம்பியும், தினகரனும் மட்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்களாம். அப்போது, ‘அண்ணன் மறுபடியும் உங்களை பார்க்கணும்னு சொல்றாரு. நாம எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம். அண்ணனை முதல்வராக்க உங்க ஆதரவு வேணும்...’ என பன்னீரின் தம்பி கேட்டாராம். ஆனால், அதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளவில்லை

இது தொடர்பாக தினகரனின் மனதை மாற்றும் முயற்சியாக எடுத்த அத்தனை முயற்சிகளும் படுதோல்வி அடைந்த நிலையில் ஓ.பி.ராஜா இதை பன்னீரிடம் சொல்லியிருக்கிறார்.

கொதித்துப்போன பன்னீர், மறுநாள் மன்னார்குடியில் நடந்த கூட்டத்தில், தினகரனை வெளுத்து வாங்கிவிட்டார். மலையோடு குண்டூசி மோதுகிறது என தினகரனை திட்டித் தீர்க்க... இதைப் பார்த்த தினகரன் டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டாராம்.

ஒரு பக்கம் நம்மளை வச்சி மத்த எல்லாரையும் கவுத்தி முதல்வராகணும்னு பாக்குறது. அது பலிக்கலைன்னா இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி திட்டுறது. இதுவே இந்த ஆளுக்கு வழக்கமாப் போச்சி. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்’ என்று தனது ஆதரவாளர்களிடம் கூறிவிட்டே, முதலில் தங்கத் தமிழ்ச்செல்வன் மூலம் சந்திப்பு ரகசியங்களை அவிழ்த்துவிட்டு, அடுத்து தானே களம் இறங்கியிருக்கிறார் தினகரன்.

 ’எடப்பாடிய அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல இந்த அமாவாசை பன்னீருக்கு பூசை பண்ணி கதையை முடிக்கணும்’ என்பதுதான் தினகரனின் லேட்டஸ்ட் ஸ்டேட்மெண்டாம்.

click me!