தலைக்கு 200 ரூபாய் காசு கொடுத்து கூட்டம் சேர்த்த தினகரன் கட்சியினர்... மைக் Announcement டில் போட்டு உடைத்த சம்பவம்

Published : Jan 23, 2019, 07:49 AM ISTUpdated : Jan 23, 2019, 10:56 AM IST
தலைக்கு 200 ரூபாய் காசு கொடுத்து கூட்டம் சேர்த்த தினகரன் கட்சியினர்... மைக் Announcement டில் போட்டு உடைத்த சம்பவம்

சுருக்கம்

தயவுசெஞ்சு காசு வாங்காமல் யாரும் போகக் வேண்டாம். எல்லாருக்கும் முறையா என்னனென்ன கிடைக்குமோ அதை வாங்கிட்டு போயி திருப்தியா சாப்பிட்டு போகணும் என  தினகரனின் பரமக்குடி சுற்றுப்பயணத்தில் காசு கொடுத்து கூட்டம் சேர்த்தது அமமுக நிர்வாகிகளே  மைக்கில் கூறியுள்ளனர்.  

பரமக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தினகரனுக்கு அமமுக நிர்வாகிகள் தலைக்கு 200 ரூபாய்  காசு கொடுத்து கூட்டம் சேர்த்த பரிதாபம் அந்த செட்டில்மென்ட்டையும் அமமுக நிர்வாகி அமமுக ஒன்றிய தலைவர் கொட்டகுடி ராஜேந்திரன் மைக் Announcementடில் போட்டு உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதில், அதற்கு அடுத்து யார் தலைமையில் வண்டி வந்துச்சி? நகரமன்ற தலைவர், நகர் ஊராட்சி செயலாளரா? கிளை செயலாளரா? அவர் பேர மேல எழுதி வந்தவங்க பேர பின்னாடி எழுதுங்க. விட்டுப்போச்சுன்னா யாரையும் குறை சொல்லாதீங்க, இப்போ இன்னும் கால் மணி நேரத்துல லிஸ்ட்டு ஒன்றிய செயலாளர்கிட்ட போயிடும் என பகிரங்கமாக கூறினார்.

அதோடு விட்டாரா? பைக்குல வந்தா, ரெண்டு பேரு மூணு பேருன்னு பைக் நம்பர் போட்டு குடுக்கணும்... இப்போ நகரத்துல இருந்து அஞ்சி பைக்குல பத்து பேரு வந்தா  அதை அப்படியே எழுதுங்க, ஏனென்றால் காசு வாங்காமல் யாரும் போக வேண்டாம். அதாவது அண்ணன் டிடிவி வரும்போது பெண்களுக்கு முன்னாடி இடம் விட்டுட்டு அவங்கவங்க அப்படியே பின்னாடி போயிரணும் என பேசினார்.

கடைசியாக அந்த லிஸ்ட்டை, அண்ணன் சண்முகநாதன் கிட்ட குடுத்துடுங்க, அப்புறம் மறந்துட்டேண்ணே ரெண்டுபேரு விட்டுப்போச்சி மூணு பேரு விட்டுப்போச்சின்னு சொன்னா நான் பொறுப்பில்லை, கோச்சிக்க கூடாது, எல்லாருக்கும் முறையா என்னனென்ன கிடைக்குமோ அதை வாங்கிட்டு போயி திருப்தியா சாப்பிட்டு போகணும் என மைக்கில் தில்லாக பகிரங்கப்படுத்தினார் அமமுக ஒன்றிய தலைவர் கொட்டகுடி ராஜேந்திரன்.

PREV
click me!

Recommended Stories

ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!
வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி