போலீஸ் கஸ்டடியில் முதல்வருக்கு உத்தரவு போட்ட தினகரன்: பொங்கி எழுந்த மேலிடம்!

First Published Apr 27, 2017, 2:36 PM IST
Highlights
dinakaran ordered cm in police custody


இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி போலீசார், தினகரனை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்தனர்.

அவ்வாறு விசாரணை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், முதல்வர் எடப்பாடிக்கு, டெல்லியில் இருந்து தினகரன் சில உத்தரவுகள் போட்டதையும், அதை அவர் பின்பற்றியதையும் போலீசார் கண்காணித்துள்ளனர்.

அதனால், தினகரன் மறைமுகமாக ஆட்சியை இயக்கி கொண்டிருக்கிறார் என போலீசார் முடிவெடுத்து, அதை சொல்ல வேண்டிய இடத்திற்கு சொல்லி இருக்கின்றனர்.

அதன் பின்னரே, மென்மையான விசாரணை கடுமையாக மாறி, கைது வரை போய் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடந்தபோதே ஆடிப்போன தினகரன் தரப்பு, அமைச்சர் தம்பிதுரை மூலம் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  ஆகோயோருக்கு சமரச தூது விட்டது.

ஆனால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அரசியலை விட்டு விலகும் வரை, தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று, அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

அதற்கு முன்னதாக, பிரதமருக்கு வேண்டிய மடாதிபதி மூலமும், தினகரன் தரப்பு சமரச முயற்சியை மேற்கொண்டது. நீங்கள் விரும்பும் வகையில் தினகரன் தரப்பு செயல் படுவதற்கு தயாராக இருக்கிறது. அதனால் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று மடாதிபதி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

அதற்கு, தினகரன் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை, சசிகலா மட்டுமே எங்கள் டார்கெட். அது மட்டும் அல்ல, சசிகலா குடும்பம் ஒட்டு மொத்தமாக அரசியலை விட்டு ஒதுங்கி விட்டால், நாங்கள் எங்கள் நடவடிக்கையை நிறுத்தி கொள்கிறோம் என்றும் மேலிடத்தில் இருந்து கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதையும் மீறி, ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் களம் இறங்கியதன் காரணமாகவே, இரட்டை இலை முடக்கம், தேர்தல் நிறுத்தம், லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரணை என்று தினகரன் மீது அடுத்தடுத்து தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி போலீசாரின் முதல் இரண்டு நாட்கள் விசாரணை வரை, பெரிய அளவில் நெருக்கடி இல்லாமல் இருந்த தினகரன், அடுத்த இரண்டு நாட்களில் மனதளவில் மிகவும் தளர்ந்து போய் இருக்கிறார்.

டெல்லி போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, முதல்வர் எடப்பாடியை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தினகரன் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகள் அடிப்படையிலேயே முதல்வரும் செயல் பட்டிருக்கிறார்.

இதை அறிந்து கொண்ட டெல்லி மேலிடம், அணிகள் இணைப்புக்கு தடையாக இருப்பதே தினகரன்தான் என்பதை உறுதி செய்து கொண்டு, அவரை சுதந்திரமாக விட்டால், அணிகள் இணைப்பே சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

அதன் பிறகே, தினகரன் மீதான விசாரணை கடுமையாக்கப்பட்டு, நள்ளிரவில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!