
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தன்னை தொடர்புகொண்டால், கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை மீட்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை தேர்தல்களை சந்திப்பதற்கு அரசியல் அமைப்பு தேவை என்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி, கே.சி.பழனிசாமியை கட்சி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கே.சி.பழனிசாமி நீக்கம் குறித்தும் அவரை தனது கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்தும் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இதுவரை கே.சி.பழனிசாமி என்னை தொடர்புகொள்ளவில்லை. அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினால், அவரை கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.