என்னையும் சேர்த்து 100... அந்தப்பக்கம் 104.... 4 அல்லது 5 பேர் எங்கள் பக்கம் வந்தால்... என்னவாகும்? தினகரனின் மாஸ்டர் ப்ளான் என்ன?

 
Published : Jan 10, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
என்னையும் சேர்த்து 100... அந்தப்பக்கம் 104.... 4 அல்லது 5 பேர் எங்கள் பக்கம் வந்தால்... என்னவாகும்? தினகரனின் மாஸ்டர் ப்ளான் என்ன?

சுருக்கம்

Dinakaran has teased Palanisamy regards salary issue

எதிர்கட்சியில் என்னையும் சேர்த்து 100 பேருக்கு மேல் இருக்கிறோம். அந்தப்பக்கம் 104 பேர் இருக்காங்க. இன்னும் 4 அல்லது 5 பேர் எங்கள் பக்கம் வந்தால் என்னவாகும் என கேட்டார் சுயேச்சை எம்.எல்.ஏ தினகரனின் இந்த கணக்கால் ஆதிமுக கூடாரம் ஆட்டம் கண்டுள்ளது.

சுயேட்ச்சை வேட்பாளர் தினகரன் முதன்முதலாக சட்டமன்றம் போனதிலிருந்து, `வசூல்ராஜா MBBS’ படத்தில் காலேஜ் டீன் ஆக இருக்கும் பிரகாஷ் ராஜை கேள்விமேல் கேள்வியை கேட்டு கடுப்பேற்றுவார் அதேமாதிரி  எடப்பாடியையும் பன்னீரையும் தினம் தினம் வெச்சு செய்கிறார் தினகரன்.

நேற்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வெளிநடப்பு செய்த தினகரன் செய்தியாளர்களிடம் கலகலப்பாக பதிலளித்தார் இந்த ஆட்சி ஐசியூவில் இழுத்துக்கொண்டு இருக்கிறது என கலாய்த்தார்.  ``யாரும் பார்க்காதபோது, எடப்பாடி-பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொன்னார். அதுமட்டுமல்ல காலையில் பேரவைக்கு வெளியே என்னைப் பார்த்த இரண்டு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதறியடித்து பேரவைக்குள் ஓடிவிட்டார்கள் என ஆளும் தரப்பை சிரித்துக்கொண்டே வெறுப்பேத்தி வருகிறார்.

இன்றைய, கூத்தொடரில் பேசவிடாமல் தடுத்து தனது வாதத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிய சபா மீது கோபப்பட்டு வெளியில் வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம், எடப்பாடி, மதுசூதனன் என யாருக்கும் வஞ்சனை இல்லாமல் ஒட்டு மொத்தமாக சேர்த்து வெச்சு கூலாக கலாய்த்தார்.

முதலில் பன்னீர்செல்வம் பற்றி பேசிய போது... பெரியகுளத்தில் நான் எம்பியாக இருந்தபோதும் சரி முதல்வராக இருந்த சமயத்திலும் சரி பன்னீர் என்னை  சார் சார்ன்னு பேசுனவார். முதல்வர் பதவி பரிபோனதும்  எதிர்த்து தர்மயுத்தம் நாடகம் நடத்தினார்.

 துணை முதல்வர் பதவிக்காக தர்மயுத்தம் நடத்தினார் என பன்னீரை பற்றி பட்டாசு போல வெடித்தார். பிறகு எடப்படியிடம் தாவிய தினா எம்எல்ஏக்களை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமி என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அது என்ன அவர் வீட்டு பணமா? யாருடைய பணமோதானே. 'ஊரான் வீட்டு நெய்யே... எங்க அண்ணன் பொண்டாட்டி கையேன்னு ஒரு பழமொழி இருக்கு... தஞ்சாவூர் மாவட்டத்தில அடிக்கடி சொல்வாங்க. தன் வீட்டு நெய்யை பத்திரமாக வச்சுக்கிட்டு அடுத்தவன் வீட்டு நெய்யை அள்ளி விடுவாங்க அந்த கதையா இருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள ஊதிய உயர்வு. கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் பணத்தை அள்ளி விடுவதா? என ஏகத்துக்கும் கலாய்த்தார்.



அதுமட்டுமல்ல, எதிர்கட்சியில் என்னையும் சேர்த்து 100 பேருக்கு மேல் இருக்கிறோம். அந்தப்பக்கம் 104 பேர் இருக்காங்க. இன்னும் 4 அல்லது 5 பேர் எங்கள் பக்கம் வந்தால் என்னவாகும் என கேட்டார் சுயேச்சை எம்.எல்.ஏ தினகரனின் இந்த கணக்கால் ஆதிமுக கூடாரம் ஆட்டம் கண்டுள்ளது. தினகரனின் இந்த பேச்சை கேட்கும் ஆளும் கட்சியினர் தலையை பீய்த்துக்கொண்டு தீனகரன் மீது கடுப்பில் இருக்கிராரர்களாம்.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!