பிரச்சாரத்திற்கு மறுக்கப்பட்ட நிலையில் ராஜேஷ் லக்கானியை சந்திக்கிறார் டிடிவி...!

 
Published : Dec 07, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
பிரச்சாரத்திற்கு மறுக்கப்பட்ட நிலையில் ராஜேஷ் லக்கானியை சந்திக்கிறார் டிடிவி...!

சுருக்கம்

dinakaran going to meet rajesh lakkani to give permission for campaingn

ராஜேஷ் லக்கானியை சந்திக்கிறார் டிடிவி...!

ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய டிடிவி.தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இன்று பிரசாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் செய்ய தினகரனுக்கு கடந்த 4 நாட்களாக, காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. இதனால் தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடியாமல் தினகரன் தரப்பு தவித்து வருகின்றனர். 

காவல்துறை அனுமதி மறுப்பதால் தேர்தல் பிரச்சாரத்தை தினகரன் அணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து,அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை செய்தார்

இதனை தொடர்ந்து தற்போது தினகரன் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து முறையிட உள்ளார்.

தேர்தல் சின்னம் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில்,தினகரனுக்கு பிரச்சாரம் மறுக்கப்பட்டு வருகிறது.

முறையாக சின்னம் கிடைத்தபிறகே,தினகரனால் ஆர்.கே நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு