"சசிகலா படத்தை பயன்படுத்தவே முடியவில்லை" - தினகரன் ஆதரவாளர்கள் குமுறல்

 
Published : Apr 08, 2017, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
"சசிகலா படத்தை பயன்படுத்தவே முடியவில்லை" - தினகரன் ஆதரவாளர்கள் குமுறல்

சுருக்கம்

dinakaran cadres couldnt use sasikala images in campaign

ஆர்.கே.நகர் இடைதேர்தலில், சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

மேலும், டி.டி.வி.தினகரன் அணியினர், அவரது சின்னமான தொப்பியும், டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா புகைப்படமும் உள்ள போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர். சில மணி நேரங்களில், அந்த போஸ்டரில் இருந்த சசிகலா புகைப்படம் கிழிக்கப்பட்டது.

இதனால், சசிகலா புகைப்படத்தை பயன்படுத்தினால், வெற்றி கிடைக்காது என, தினகரன் ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

இதேபோல், சென்னையின் பல இடங்களில், தொப்பி சின்னத்துடன், சசிகலா மற்றும் தினகரன் புகைப்படம் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த போஸ்டர்களும் கிழிக்கப்படுவதால், டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுபற்றி சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில், சசிகலாவின் போட்டோவை காட்டாமல், தினகரன் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆர்.கே.நகர் தொகுதி யில், சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால், மற்ற இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினோம்.

தற்போது, அந்த போஸ்டர்களையும் சிலர் கிழித்து எறிகின்றனர். எனவே, தேர்தல் முடியும் வரை, சசிகலா போஸ்டரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!