தினகரன் போட்ட அதிரடி ஸ்கெட்ச்... ஏமாந்து எரிச்சலான எடப்பாடி..!

By Vishnu PriyaFirst Published Apr 29, 2019, 11:46 AM IST
Highlights

புதிதாக மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், அவர்கள் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவார்கள், அதில் தீர்ப்பு வர லேட் ஆகும், ஒருவழியாய் தகுதி நீக்க தீர்ப்பு செல்லும் என்றெல்லாம் உத்தரவு வந்து, இடைத்தேர்தல் வருவதற்குள் ஆட்சிக்கு இயல்பாகவே இருக்கும் மீதி இரண்டு வருடங்களையும் ஓட்டிவிடலாம்! என்பது எடப்பாடியாரின்  கால்குலேஷனாக இருந்தது. 

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இருபத்து இரண்டு தொகுதிகளுக்கு இப்போது எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இதில் பதினெட்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. வரும் மே 23-ல் மீதி நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. 

இந்த இருபத்து ரெண்டு தொகுதிகளில் கணிசமான தொகுதிகளை வென்று, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடியார்  பகீரதபிரயத்னம் செய்து கொண்டிருக்கிறார். அதை எதிர்த்து முறியடித்து ஆட்சியை கைப்பற்றிட ஸ்டாலின் ஒரு புறம் முயல, மறு புறமோ தினகரன் டீமும் முழு எதிர்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது எடப்பாடியாருக்கு. 

இந்நிலையில் ஆளும் அணியை சேர்ந்த புதிய மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காரணம் காட்டி, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் இவர்களை தகுதி நீக்கம் செய்து, சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை குறைத்தால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையும் குறையும், இதன் மூலம் 22 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வென்றாலும் கூட, இந்த புதிய நடவடிக்கையின் மூலம் ஆட்சியை தக்க வைக்க முயலலாம்! என்பது எடப்பாடியாரின் கணக்கு. 

புதிதாக மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், அவர்கள் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவார்கள், அதில் தீர்ப்பு வர லேட் ஆகும், ஒருவழியாய் தகுதி நீக்க தீர்ப்பு செல்லும் என்றெல்லாம் உத்தரவு வந்து, இடைத்தேர்தல் வருவதற்குள் ஆட்சிக்கு இயல்பாகவே இருக்கும் மீதி இரண்டு வருடங்களையும் ஓட்டிவிடலாம்! என்பது எடப்பாடியாரின்  கால்குலேஷனாக இருந்தது. 

ஆனால், “எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தல் கோர்ட்டுக்கு போகாமல், தேர்தலை சந்திக்க தயாராவோம்.” என்று சொல்லிவிட்டார் தினகரனின் வலது கரமான வெற்றிவேல். இதில் எடப்பாடியார் தரப்பு செம்ம அப்செட்டாகி இருக்கிறது. கோர்ட்டு, கேஸுன்னு இழுத்தடிச்சால்தானே ஆட்சியை ஓட்ட முடியும், ஆனால் இவர்களோ தகுதி நீக்கமானதும், தேர்தலை சந்திக்க ரெடின்னு சொல்றது குறிப்பிட்ட காலத்தினுள் கண்டிப்பாக இடைத்தேர்தலை சந்தித்தாக வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குமே? ஏற்கனவே ஆட்சியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இப்படியொரு இம்சையுமா?......என்று கடுப்பேறி போய் இருக்கிறாராம். ’தகுதி நீக்கமானால் இனிமேல் கோர்ட்டெல்லாம் கிடையாது, நேரடியாக ரோட்டில் இறங்கி பிரசாரத்தை துவக்கிவிடுவோம்!’என்று தினகரன் போட்டிருக்கும் ஸ்கெட்ச் அசால்ட் அதகளமாக பார்க்கப்படுகிறது.

click me!