நான் ஒன்னும் தப்பாவே சொல்லல! டீல் ஓகே ஆனாதான ஒத்துக்க முடியும்? சூப்பரா விளக்கம் சொன்ன துரைமுருகன்...

By sathish kFirst Published Nov 27, 2018, 3:35 PM IST
Highlights

கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும் என இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு  முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதைன் அவர்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.’ என்று கூறினார். இது அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பேசிய துரைமுருகன், “நாங்கள் இன்னும் முழுமையான கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் எங்களிடம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளனர். அவர்கள் ‘பழைய கஸ்டமர்கள்’ என்றார். 

கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் இப்படி எங்களை கேவலமாக பேசுவதை எப்படி பொறுக்க முடியும்? ’கஸ்டமர்கள்’ அதுவும், ‘பழைய கஸ்டமர்கள்’ என்று அடையாளப்படுத்துவது கேவலத்தை தருகிறது. கஸ்டமர்! எனும் வார்த்தை கூட்டணி கட்சியையும் தோழமை கட்சியையும் அசிங்கப்படுத்தியதாக ஸ்டாலினுக்கு நேருக்கமானவர்களிடம் சொல்லி கலங்கினார்களாம் அந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள்.

 கூட்டணி காட்சிகளையும் தோழமைகட்சிகளையும் ஆறுதல் சொல்லும் வகையில் பொருளாளர் துரைமுருகனை வைத்தே விளக்கம் அளிக்க சொன்னாராம் ஸ்டாலின். கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்து சரியானது தான்  என பட்டும் படாமல் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்  பொருளாளர் துரைமுருகன் 

பொதுநல நோக்கத்துடன் பல்வேறு கட்சிகள் எங்களுடன் வந்து ஒன்று சேர்ந்துள்ளன. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மணமகளாகவும் மணமகனாகவும் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் கணவன்- மனைவி ஆகவில்லை. இன்னமும் திருமணம் நடக்காததால் திருமண பந்தம் ஏற்படவில்லை. தி.மு.க.வுடன் பல கட்சிகள் நல்ல நட்புடன் உள்ளன. அந்தத் தோழமைக் கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல.

ஆனால் எனது அரசியல் அனுபவத்தில் கூட்டணி என்பது, ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும் என இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

click me!