ஆயிரம் தான் இருந்தாலும் சித்தப்பா இல்லையா? ட்வீட் போட்டு இப்படியா கலாய்ப்பது? துரை தயாநிதி மேல் கடுப்பில் திமுக

Published : Jan 07, 2019, 08:33 PM ISTUpdated : Jan 07, 2019, 08:50 PM IST
ஆயிரம் தான் இருந்தாலும் சித்தப்பா இல்லையா? ட்வீட் போட்டு இப்படியா கலாய்ப்பது? துரை தயாநிதி மேல் கடுப்பில் திமுக

சுருக்கம்

தேர்தல் தள்ளிப்போனதை வரவேற்று அறிக்கை விட்டதற்கு தினகரன் தொடங்கி, அழகிரி மகன் துரை தயாநிதி வரை திமுக தலைவரை காய்த்துள்ளனர். அதுவும் சித்தப்பாவை துரை தயாநிதி கலாய்த்திருப்பது திமுக வட்டாரத்தில்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தினகரன் செம்ம கடுப்பில் இருக்கிறார். ஒரு பக்கம் வேட்பாளரை அறிவித்து கொண்டு மற்றொரு பக்கம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க திமுக தரப்பில், வழக்கு போட்டது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  திமுக எதிர்பார்த்ததைப்போலவே தேர்தலும் ரத்தானது. 

இந்நிலையில், அழகிரியின் மகன் துரை தயாநிதி தேர்தல் ரத்தானது குறித்து ட்வீட் போட்டுள்ளார்.  அந்த ட்வீட் திமுகவை செம்ம டென்க்ஷனில் தள்ளியுள்ளதாம்.

அதில், "நீங்கள் ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள் என்றால் துணிந்து போராடுங்கள்... நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வி பெறுவீர்களா என்பதெல்லாம் நீங்கள் போட்டியை எதிர்கொண்ட பிறகுதான் தெரியும். ஆனால், இங்கே சிலர் போட்டியை எதிர்கொள்ளவே துணிவில்லாமல் அச்சமடைகின்றனரே" எனப் பதிவிட்டிருக்கிறார்.  இடைத்தேர்தலை எதிர்கொள்ள அச்சமடைகிறார்கள் என்று துரை தயாநிதி  திமுக தலைவரும் தனது சித்தப்பாவுமாகிய ஸ்டாலினை கலாய்த்துள்ளது தெளிவாக தெரிகிறது.

மேலும் இடைத்தேர்தல் ரத்து என்றதும் அதனை  வரவேற்ற ஸ்டாலினை கலாய்க்கும் விதமாக, துரை தயாநிதி ட்வீட் போட்டுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் ஏற்கனவே, தங்களை விமர்சித்தார் என்பதற்காக தி.க தலைவர் வீரமணியை,  காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன் என கலாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!