சாதாரண ஏழை தொண்டனின் ஆசையை நிறைவேற்றிய தினகரனின் செயலை அமமுகவினர், ஆஹா ஓஹோவென புகழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புராஜ் என்ற ஒரு சாதாரண தொண்டர் டிடிவி தினகரனின் கூட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது, கூட்டம் முடிந்ததும் தொண்டர்களுக்கு கைகொடுத்து பேசிக்கொண்டிருந்த தினகரனிடம் அந்த தொண்டர், அண்ணே என் ஆட்டோவின் அருகில் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கனும் ரொம்ப நாள் ஆசை! என அன்பாக கேட்டுள்ளார்.
உடனே, எந்த மறுப்பும் சொல்லாமல் ஆட்டோ எங்கே நிற்கிறது? வாங்க போகலாம் ! என அந்த சாதாரண ஏழைத் தொண்டனின் தோளில் கை போட்டு அழைத்துச் சென்று போட்டோ எடுத்து அந்த தொண்டனின் ஆசையை நிறை வெற்றி வைத்துள்ளார்.
ஒரு எளிய தொண்டனின் விருப்பத்திற்கும்! அன்புக்கும் உடனே மதிப்பளிக்கும் அமமுக பொதுச் செயலாளர் தினகரனின் இந்த குணத்தை கண்டு அமமுக தொண்டர்கள் பெருமையாக பறைசாற்றி வருகின்றனர்.