மாரிதாஸை மிரட்டும் தர்மபுரி செந்தில் எம்.பி... இன்னும் 11 மாசம்தான்???

Published : Jul 07, 2020, 07:17 PM IST
மாரிதாஸை மிரட்டும் தர்மபுரி செந்தில் எம்.பி... இன்னும் 11 மாசம்தான்???

சுருக்கம்

அரசியல் விமர்சகர் மாரிதாஸுக்கு தர்மபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.  

அரசியல் விமர்சகர் மாரிதாஸுக்கு தர்மபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில் குமார். தொகுதி பற்றி யோசிக்க நேரமிருக்கிறதோ இல்லையோ, ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்துச் சொல்லி சர்ச்சையில் சிக்குவார். யாருக்கும் சளைக்காமல் பதிலளிப்பார். இந்நிலையில், மாரிதாஸ் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘’ஊடகதுறை, ஊடகவிலயாளர்கள் மீது மிரட்டல் விட அசைண்மெண்ட் எடுத்திருக்கும் நபர்களுக்கு திராவிடம் காத்த பெரியார் மண்ணில் உங்கள் முயற்சி சிறிது அளவாவது வெற்றிபெற இன்னும் 11 மாதங்கள்தான் உள்ளது. அதற்கு பின் சட்டம் மிகமிக கடுமையாக தாக்கும். அதுவரை ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செந்தில்குமார் இந்தப்பதிவினை அரசியல் விமர்சகர் மாரிதாட்ஸை சுட்டிக்காட்டி இன்னும் பதொன்ரு மாதங்கள்தான். அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். அவரது இந்தப்பதிவுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!