விவாகரத்துக்கு பிறகும் ஒரே ஓட்டலில் தங்கியிருக்கும் தனுஷ் -ஐஸ்வர்யா.. காதலர் தினத்திற்கு தயாராகும் ரஜினி மகள்

Published : Jan 24, 2022, 10:32 AM IST
விவாகரத்துக்கு பிறகும் ஒரே ஓட்டலில் தங்கியிருக்கும் தனுஷ் -ஐஸ்வர்யா.. காதலர் தினத்திற்கு தயாராகும் ரஜினி மகள்

சுருக்கம்

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய மாட்டார்கள், தங்கள் பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில்தான் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்ட அன்று முதலே இருவரும் ஐதராபாத்தில் தங்கி வருகின்றனர். தனுஷ்- ஐஸ்வர்யா சிதாரா ஓட்டலில் தங்கியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது. 

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையிலும் இருவரும் ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் வெவ்வேறு படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா காதலர் தினத்திற்காக பாடல் ஒன்று இயக்கம் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த வாரம் பிரிந்து வாழப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனாலும் அரசல்புரசலாக பல்வேறு யூகச் செய்திகள் வெளியாகி வருகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. விவாகரத்து செய்யப் போவதாக அவர்கள் அறிவித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் தனுஷ் ஐஸ்வர்யா குறித்த செய்திகள் பரபரப்பு குறையாமல் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றன. இதற்கிடையில் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்டிருப்பது வழக்கமாக கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை தான், ஆனால் இது விவாகரத்து அல்ல, அவர்கள் இணைந்து வாழ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய மாட்டார்கள், தங்கள் பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில்தான் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்ட அன்று முதலே இருவரும் ஐதராபாத்தில் தங்கி வருகின்றனர். தனுஷ்- ஐஸ்வர்யா சிதாரா ஓட்டலில் தங்கியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இருவரும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஓட்டலில் தங்கியுள்ளனர், இந்த ஸ்டுடியோவில் உள்ள சிதாரா ஓட்டலில் படப்பிடிப்பு நடத்தும் நட்சத்திரங்கள் தங்குவது வழக்கம், அந்த வகையில் தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அங்கு தங்கி தனித்தனியே படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அதே நேரத்தில் டிப்ஸ் மற்றும் பிரேர்னா அரோராவுக்காக ஒரு காதல் பாடலை இயக்க ஐஸ்வர்யா தயாராகி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரி 25ஆம் தேதி ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்க உள்ளது. இந்தப் பாடல் காதலர் தின வாரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒரே ஓட்டலில் தனித்தனியே தங்கியிருந்தாலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது, ஏற்கனவே தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியதுபோல படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகு இருவருமே இணைந்து சென்னை திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!