ரூ.20 கோடிக்கு பணிந்த தனசேகரன்..? வியாபாரமாய் முடித்த விக்ரமராஜா மகன்... ஓய்ந்து போவாரா விருகை ரவி..?

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2021, 5:31 PM IST
Highlights

மு.க.ஸ்டானினை சந்தித்த ‘விருகை’ விரக்தி தனசேகரன், ’’தலைவரை மீறி மாற்றுக் கருத்தில்லை. பிரபாகரன் ராஜாவுக்காக உழைத்து ஜெயிக்க வைத்து எம்.எல்.ஏ ஆக்கி தலைவர் முன் நிறுத்துவேன்" என்று ஆர்ப்பரித்தார். 

 திமுக தனதுவேட்பாளர் பட்டியலை அறிவித்த உடன் உதயசூரியனை உதறல் எடுக்க வைத்த விவகாரம் விருகம்பாக்கம் தொகுதி. காரணம் இருமுறை இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர் தனசேகரன். மீண்டும் அவருக்கே இந்த முறையும் சீட்டை திமுக கொடுக்கும் என எதிர் பார்த்துக் காத்திருந்தார் தனசேகரன். ஆனால், உதயநிதி ஸ்டாலினின் ரூட்டைப்பிடித்து விக்கிரகங்களைத் தூவி சிட்டைபெற்று விட்டார் பிரபாகர்ராஜா. 

வேட்பாளர் பட்டியல் வெளியானதில் திமுக வேட்பாளாரக தாம் தான் அறிவிக்கப்பட உள்ளோம் எனக் காத்திருந்த தனசேகரின் வீட்டுக்கே சூட்டோடு சூடாக  சென்று நின்றார் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 27 வயதான பிரபாகரன் ராஜா. ஜீரணிக்க முடியாத தனசேகரன் வெகுண்டெழுந்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கே சென்று, தனது ராஜினாமா கடிதத்தை ஆதரவாளர்களுடன் சென்று கொடுத்தார். வேட்பாளரை மாற்றி அறிவிக்க பரிசீலனை செய்ய வேண்டும். தலைமை அந்த முடிவை எடுக்காவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தார் தனசேகரன்.

இதனால் ஷாக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரவர்களுக்கு அடுத்த ரவுண்டு வரும். அதுவரை காத்திருங்கள் எனக்கூறி அண்ணா சொன்ன சேலைக்கதையை முன்னுதாரணமாய் காட்டினார். இந்த மெய் வார்த்தைகளுக்கு மயங்கினாரா தனசேகரன் என்பது அப்போது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுத்து மு.க.ஸ்டானினை சந்தித்த ‘விருகை’ விரக்தி தனசேகரன், ’’தலைவரை மீறி மாற்றுக் கருத்தில்லை. பிரபாகரன் ராஜாவுக்காக உழைத்து ஜெயிக்க வைத்து எம்.எல்.ஏ ஆக்கி தலைவர் முன் நிறுத்துவேன்" என்று ஆர்ப்பரித்தார். 

தனசேகரன் ஸ்டாலினை நேரில் சந்தித்த தனசேகரன் கண்ணீர்விட்டு உருக்கமாக பேசினார். எனக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் தலைமைக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறினார். இத்தனை மனமாற்றம் தனசேகரனுக்கு எப்படி வந்தது? என விசாரித்த போதுதான் சில தகவல்களை திமுகவினரே கொட்டித்தீர்த்தனர். ‘’தனசேகரன் எப்படியும் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர் பார்த்தார். ஆனால், உதயநிதியை பிடித்து சீட்டை வாங்கி விட்டார் பிரபாகர் ராஜா. தனக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் ஏதாவது தனசேகரன் தனக்கு எதிராக பிரச்னைகளை கிஅக்கூடும் என்கிற காரணத்தால், வேட்பாளர் பட்டியல் அறிவித்த உடன் நேராக தனசேகரன் வீட்டுக்கு ஆதரவு கேட்டு சென்ற பிரபகர் ராஜாவின் காரை உடைத்து தாக்கி தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர் தனசேகரனின் ஆதரவாளர்கள். நல்லவேளை பிரபாகர் ராஜா கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்பி விட்டார். 

அதன் பிறகு தனசேகரன் அண்ணா அறிவாலயம் சென்று தனது விரக்தியை வெளிப்படுத்தி தலைமைக்கு எதிராக தாவிக்குதித்தார். ஆனால் சில நாட்களில் தனசேகர் ’தனத்தால்’ மயங்கி தலைகீழாக மாறி விட்டார். அடுத்து விக்ரமராஜா மகன் பிரபாகர் ராஜாவை வெற்றி பெற வைப்பதே எனது தலையாய கடை என மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு கூக்குரலிட்டார் தபசேகரன். அந்தக் கூக்குரலுக்கு பின்னணியின் பிரபாகர் ராஜா கொடுத்த ’20 ஸ்வீட்டுகள்’ இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், ‘’ அண்ணன் இப்படி மாறுவார் எனத் தெரியவில்லை’’ என தனசேகரனை நம்பி தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்த வட்டம், பகுதி, லொட்டு லொசுக்குகள் எல்லாம் பதவி தப்புமா? என புலம்பித் தவிக்கிறார்கள்.  

தனசேகரனும், பிரபாகர் ராஜாவும் முட்டி மோதிக்கொண்டபோது, இவர்கள் பிரச்னையை வைத்து எளிதாக மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என காலரை தூக்கி விட்டுக் கொண்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ., விருகை ரவியின் கனவு இப்போது கந்தலாகி போய் விட்டதாக கூறுகிறார்கள். 
 

click me!