"ஜெயலலிதாவின் உண்மையான தம்பி பழனிச்சாமி" - சபாநாயகர் தனபால் உருக்கம்!!

 
Published : Jul 19, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"ஜெயலலிதாவின் உண்மையான தம்பி பழனிச்சாமி" - சபாநாயகர் தனபால் உருக்கம்!!

சுருக்கம்

dhanabal speech in assembly

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் சபாநாயகர் தனபால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து உருக்கமாக பேசினார்.

ஜூன் 14 ஆம் தேத துவங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சபாநாயகர் தனபால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து உருக்கமாக பேசினார்.

சட்டப்பேரவையில், எதிர்கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா தெரிவித்ததாக தனபால் கூறினார்.

அவையில், ஜெயலலிதா பேச்சு குறித்தும், அவரின் நடவடிக்கைகளையும் நினைவுபடுத்தி பேசினார் சபாநாயகர். மேலும் பேசிய அவர், நடப்பு கூட்டத் தொடர் 37 நாட்களும், 194.44 மணி நேரமும் நடைபெற்றதாக கூறினார்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் உரையாட அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, அவைக்கு 12 பேர் வராதது வருத்தம் என்று கூறினார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் அவைக்கு வரவில்லை. இதனை சபாநாயகர் சூசகமாக தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரில் 25 மசோதாக்கல் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உண்மைத் தம்பி பழனிசாமி என்று கூறிய அவர், சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!