டிஜிபி ஐயா.. என் மனைவி தாலி செயின் அறுத்துட்டாங்க.. எல்லையில் இருந்து வீடியோ போட்ட CRPF வீரர்

Published : Apr 29, 2022, 04:19 PM IST
டிஜிபி ஐயா..  என் மனைவி தாலி செயின் அறுத்துட்டாங்க..  எல்லையில் இருந்து வீடியோ போட்ட CRPF வீரர்

சுருக்கம்

சொந்த கிராமத்தில் தனது மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயின் அறுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து காஷ்மீர் எல்லையில் இருந்தவாறு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார். 

சொந்த கிராமத்தில் தனது மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயின் அறுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து காஷ்மீர் எல்லையில் இருந்தவாறு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் தாங்கள் எப்படி நிம்மதியாக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதுபோன்ற குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை . இந்நிலையில்தான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில்,

தங்களது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், பேரூர்  கிராமத்தில் வசித்து வருபவர் நீலமேகம், இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் துணை ராணுவ படையான சிஆர்பிஎப் எனப்படும் படைப்பிரிவில் சேர்த்தார். தற்போது அவர் காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வருக்கும், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத்துவங்களும் அவர், நான் காஷ்மீரில் சிஆர்பிஎப் படையில் பணியாற்றி வருகிறேன். எனது கிராமத்தில் எனது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எனது மனைவி, 10 மாத கைக்குழந்தை, வயதான தாய் தந்தையர் அங்கு உள்ளனர். இந்நிலையில் யாரோ ஒரு மர்ம நபர் என் மனைவியின் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுவிட்டார். நாங்களே ஆண்டிற்கு மூன்று முறை 4 முறையான் ஊருக்கு வந்து செல்கிறோம். அதிலும் கிடைக்கிற விடுமுறை நாட்கள் பயண நேரத்திற்கே செலவாகி விடுகிறது. எப்போதோ ஒருமுறை நான் வந்து செல்கிறோம். இந்த நிலையில் குடும்பத்தினர் இது போன்ற பிரச்சினைகளை சந்திப்பதாக வருகின்ற செய்திகள் எங்களை நிம்மதி இழக்க வைக்கிறது. காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஐயா அவர்கள் என் மனைவியின் தாலி செயினை அறுத்து சென்ற குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும். எங்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தால் தான் நாங்கள் எல்லையில்  நிம்மதியாக பணியாற்ற முடியும் எனவே எனது  குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை