நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்….மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் விளக்கம்..

Asianet News Tamil  
Published : Mar 05, 2017, 06:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்….மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் விளக்கம்..

சுருக்கம்

Nataraj explain

நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்….மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் விளக்கம்..

சென்னை மயிலாப்பூர் எம்எல்ஏவும் முன்னாள் டி.ஜி.பியுமான நடராஜ் எடப்பாடி பழனிசாமியில் பக்கம் சென்றுவிட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு அதிமுக பிளவுபட்டுபோனது. முதலமைச்சராக பதவி வகித்துவந்த ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தியதால் தமிழக அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால், எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 122 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர் 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களில் முக்கியமானவர் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் எம்எல்ஏவுமான நடராஜ்.

இந்நிலையில் நேற்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடராஜும் கலந்து கொண்டார். இதனால் நடராஜ் எடப்பாடி அணிக்கு தாவிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது குறித்து விளக்கமளித்த நடராஜ்,தனது  மயிலாப்பூர் தொகுதி தொடர்பான நலத்திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் இவ்விழாவில் கலந்து கொண்டதாக கூறினார்.

தான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான் என்று நடராஜ் உறுதிபடத் தெரிவித்தார். .

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!