துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..!

Published : Sep 20, 2020, 08:32 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..!

சுருக்கம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று மதியம் அல்லது மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 25ம் தேதியும் உடல் பரிசோதனைக்காக ஓ.பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அன்றைய தினமே ஓ . பன்னீர் செல்வம் வீடு திரும்பினார். அதேபோல கேரள ஆயுர்வேத சிகிச்சைகளையும் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது மேற்கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!