சென்னையில் பாசப் போராட்டம்... தாயை தேடி அலையும் டென்மார்க் இளைஞர்...!! ஒரு முறைபார்த்தால் போதும் என கண்ணீர்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 26, 2019, 1:16 PM IST
Highlights

இந்த முறை நிச்சயம் என் தாயைப் கண்டு பிடித்து விடுவேண், தாயை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் அதிகமாகி விட்டது என்று கண் கலங்கினார். ஒரு முறையாவது அம்மாவின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற உள்ளது தவிக்கிறது. நிச்சயம் பார்ப்பேன் என்ற  நம்பிக்கையுடன்  தேடிக்கொண்டிருக்கிறேன்.  

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்ட டேவிட் சாந்தகுமார் என்ற இளைஞர் தமிழகத்தில் தனது தாயை தேடி அலைந்து வருகிறார்.அவரின் பாசப்போராட்டம் காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. 

குடும்ப வறுமை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை சின்னக்கடை தெருவை சேர்ந்த கலியமூர்த்தி, தனலட்சுமி தம்பதியினர் தாங்கள் பாசமாக பெற்றெடுத்த இரண்டு மகன்களையும் டென்மார்க்கை சேர்ந்த  வெவ்வேறு தம்பதியருக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு தத்து கொடுத்து கொடுத்து விட்டனர்.  இந்நிலையில் அவர்களின் இளையமகன் சாந்தகுமார் , டேனியல் ராஜ் என்ற பெயருடன் டென்மார்க் தம்பதியரால் அங்கு  செல்வ செழிப்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரின் நிறத்திலும் உருவத்திலும் தமிழர் என்பதை மற்றும் கொஞ்சமும் மாறவில்லை.  சிறுவயதில் இருந்தே தத்தெடுக்கப்பட்ட உண்மையை அவரது வளர்ப்பு பெற்றோர்கள் சொல்லியே வளர்த்தனர். இந்நிலையில் டென்மார்க்கில் நன்கு படித்து முடித்து அங்கு உள்ள பங்குச் சந்தை  நிறுவனத்தில்  நல்ல முறையில் பணியாற்றி வருகிறார் சாந்தகுமார். அவருக்கு  திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும்  உள்ளன. 

இந்நிலையில் 40 ஆண்டுகள் கழித்து தன் சொந்தத் தாயை பார்க்க வேண்டும் என்றால் ஏக்கம் சாந்த குமார் டானியல் ராஜ்க்கு  ஏற்பட்டது.  அதனையடுத்து தன்னை வளர்த்த பெற்றோரின் சம்மதத்துடன் தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை தேடி தமிழகம் வந்துள்ளார் சாந்தகுமார். கடந்த செப்டம்பர் 24ம் தேதி சென்னை வந்தவர் சென்னையில் தன் பெற்றோர்கள் வாழ்ந்த இடங்களில்  எல்லாம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.  ஆனாலும்  இதுவரையில் அவரால் தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை. அனாலும் இரவு பகல் பாராமல் தொடந்து தேடி அலைந்து வருகிறார்.

 

இந்த நிலையில் சில பத்திரிக்கைகளிடம் பேசியுள்ள சாந்தகுமார் டானியல்,  ஏற்கனவே அம்மாவைத் தேடி தமிழகத்திற்கு இரண்டு முறை வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளேன்.  இந்த முறை நிச்சயம் என் தாயைப் கண்டு பிடித்து விடுவேண், தாயை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் அதிகமாகி விட்டது என்று கண் கலங்கினார். ஒரு முறையாவது அம்மாவின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற உள்ளது தவிக்கிறது. நிச்சயம் பார்ப்பேன் என்ற  நம்பிக்கையுடன்  தேடிக்கொண்டிருக்கிறேன்.  இதுவரையில் என் தாயை பார்க்க முடியாவிட்டாலும் அவர் தொடர்பான புகைப்படங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது என்றார். இதனால் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்ற அவர், வரும்   29ஆம் தேதி வரை இந்தியாவில் தங்க அனுமதி இருக்கிறது,  இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் என் தாயை பார்த்து விடுவேன் என்றார் நம்பிக்கை  இருக்கிறது என்றார், அவரின் தாய் பாசத்தை கேள்விப்பட்ட  சில தொண்டு நிறுவனங்கள் அவருக்கு உதவியாக தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.  விரைவில் உங்கள் அம்மாவை சந்திக்க வாழ்த்துக்கள் சாந்தகுமார்.
 

click me!