ஆயுள் சிறைவாசிகள் மீது கருணை காட்ட வேண்டும்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிராமணர்..!

By vinoth kumarFirst Published May 31, 2020, 2:31 PM IST
Highlights

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறை கைதிகளை விடுவிக்க கோரி சமூக இணையதள போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிராமணர் ஒருவர் பதாகை ஏந்தி பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறை கைதிகளை விடுவிக்க கோரி சமூக இணையதள போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிராமணர் ஒருவர் பதாகை ஏந்தி பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

இன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் ,10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறை கைதிகளை விடுவிக்க கோரி சமூக இணையதள போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. ஆதரவோடு நில்லாமல் தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் களத்தில் பங்கேற்று போராட்டத்தை  ஒருங்கிணைப்பார்கள் என்றும் தலைமையகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA மற்றும் இமயம் சமூக செயற்பாட்டாளர் சரவணன்  அவர்கள் நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் பதாகை ஏந்தி பங்கேற்றார். திரளான மஜகவினர் சமூக இடைவெளியுடன் வீதியோரத்தில் இரு வரிசைகளாக நின்று பதாகை ஏந்தி முழக்கமிட்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தமிழக அரசு கருணைக் காட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதில் சாதி, மத, வழக்கு  பேதங்களை காட்டக் கூடாது என்றும் கூறினார். இந்த போராட்டத்தில் பிராமணராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதாகையை ஏந்தி  கலந்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், வேதை ஒன்றிய செயலாளர் சலீம், துளசியாப்பட்டினம் கிளை செயலாளர் இப்ராகிம் ஷா உள்ளிட்ட  திரளான மஜகவினர் அணிவகுத்தனர். தமிழகம் முழுக்க மஜகவினர் சமூக இடைவெளியுடன் முன்னெடுத்த இப் போராட்ட களத்தில் மஜக வின் தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலளார்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமையேற்று வழி நடத்தி , சிறைவாசிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் நம்பிக்கை ஊட்டியுள்ளனர்.

இது போல் தாராபுரத்தில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, சென்னையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் K.M.ஷெரிப், கும்பகோணத்தில்  விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், சென்னையில் தமிழர்  நல பேரியக்க தலைவர் இயக்குனர் களஞ்சியம்  உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். 

click me!